இந்தியாவின் முதன்மையான மாருதி சுசூக்கி கார் நிறுவனம், தனது அனைத்து கார்களின் விலையை ரூபாய் 689 வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. ஏப்ரல் 1 முதல் கார்களுக்கான நம்பர் பிளேட்டின் முறையில் உயர் பாதுகாப்பு கொண்ட நம்பர் பிளேட் வழங்குவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து வாகனங்கள் தொடர்பான பாதுகாப்பு முறைகள் உட்பட வாகன பதிவு , ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்றில் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் நுட்ப முறைக்கு ஏற்ற பல்வேறு செயற்பாடுகளை அரசு மேற்கொண்டுள்ளது.
மாருதி சுசூக்கி விலை உயர்வு
உயர் பாதுகாப்பு கொண்ட நம்பர் பிளேட் (high security registration plates – HSRP) பொருத்தப்பட்டு வாகனங்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற அரசின் கட்டாய உத்தரவின் காரணமாக ஏப்ரல் 1 முதல் தனது கார்களின் விற்பனையக டெல்லி விலையில் ரூ. 689 வரை ஆல்டோ 800 முதல் எஸ் கிராஸ் வரை உள்ள அனைத்து மாடல்களுக்கும் இந்த விலை அதிகரிப்பு பொருந்தும் என மாருதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சமீபத்தில் மாருதி சுசூகி வெளியிட 2018-19 ஆம் நிதி வருடத்தில் முதன்முறையாக 18 லட்சம் வாகன விற்பனையை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்நிறுவனம் தொடர்ந்து இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளராக விளங்குகின்றது.