Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

2 கோடி கார்களை உற்பத்தி செய்த மாருதி சுசூகி

by automobiletamilan
June 5, 2018
in வணிகம்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளராக விளங்கும் மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், 34 ஆண்டுகள் 5 மாதங்களில் சுமார் 2 கோடி கார்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. குஜராத்தில் இயங்கி வரும் மூன்றாவது ஆலையில் 20வது மில்லியன் உற்பத்தியை மாருதி ஸ்விஃப்ட் கார் வாயிலாக இலக்கை அடைந்துள்ளது.

மாருதி சுசூகி இந்தியா

மாருதி உதயோக் மற்றும் ஜப்பான் நாட்டின் சுசூகி மோட்டார் கார்ப்ரேஷசன் இணைந்து 1983 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் கார் உற்பத்தியை தொடங்கிய மாருதி சுசூகி நிறுவனம், குறைந்த விலையில் சிறப்பான முறையில் கார்களை விற்பனை செய்து வரும் நிலையில் கடந்த 34 ஆண்டுகளில் சுமார் 2 கோடி கார்களை உற்பத்தி செய்துள்ளது. இந்நிறுவனம் ஜப்பான் நாட்டில் 20 மில்லியன் உற்பத்தியை எட்ட 45 ஆண்டுகள் 9 மாதங்கள் எடுத்துக் கொண்ட சாதனையை இந்தியாவில் முறியடித்துள்ளது.

இந்தியாவில் குர்காம், மானசேர் ஆகிய இடங்களில் மாருதி சுசூகி ஆலையும், குஜராத்தில் சுசூகி நிறுவன ஆலையும் அமைந்துள்ளது. 1983 ஆம் ஆண்டு முதன்முதலாக உற்பத்தி செய்யப்பட்ட கார் மாருதி 800 ஆகும். இந்நிறுவனம் தற்போது 16 மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகின்றது.

இந்நிறுவனம் அதிகபட்சமாக மாருதி ஆல்டோ காரை 3 கோடி 17 லட்சம் கார்களை உற்பத்தி செய்துள்ளது. அதனை தொடர்ந்து மாருதி 800 காரை 2 கோடி 19 லட்சம் யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது.

மாருதி சுசூகி இந்தியா உற்பத்தி விபரம்
உற்பத்தி ஆரம்பம்டிசம்பர் 1983
10 லட்சம்மார்ச் 1994
50 லட்சம்ஏப்ரல் 2005
1 கோடிமார்ச 2011
1.50 கோடிமே 2015
2 கோடிஜூன் 2018

 

டாப் 5 கார் மாடல்கள்
மாடல்யூனிட்டுகள்
ஆல்டோ 3.17 மில்லியன்
மாருதி 800 2.91 மில்லியன்
வேகன்ஆர் 2.13 மில்லியன்
ஆம்னி 1.94 மில்லியன்
ஸ்விஃப்ட் 1.94 மில்லியன்

Tags: Maruti 800Maruti AltoMaruti Suzuki India ltdமாருதி 800மாருதி ஆல்டோமாருதி சுசூகி இந்தியா
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan