இந்தியாவின் முன்னணி தயாரிப்பாளரான மாருதி சுசூகி நிறுவனம் நவம்பர் 2023 மாதந்திர விற்பனையில் 1,34,158 யூனிட்டுகளாக பதிவு செய்துள்ளது. முந்தைய ஆண்டு இதே மாததுடன் ஒப்பீடுகையில் 1.36 சதவிகித வளர்ச்சியாகும்.
குறிப்பாக மாருதியின் எஸ்யூவி வாகனங்களின் விற்பனை வளர்ச்சி 51 % அதிகரித்துள்ளது.
Maruti Suzuki Sales Report November 2023
பிரெஸ்ஸா, எர்டிகா, எக்ஸ்எல்6, ஃபிரான்க்ஸ், ஜிம்னி, எஸ்-கிராஸ், கிராண்ட் விட்டாரா, இன்விக்டோ போன்ற கார்களின் விற்பனை பிரிவு அமோக வளர்ச்சியை மாருதி சுசூகிக்கு தந்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதம் யூட்டிலிட்டி வாகன விற்பனை எண்ணிக்கை 32,563 ஆக இருந்த நிலையில் நவம்பர் 2023 முடிவில் 51 % வளர்ச்சி அடைந்து 49,016 எண்ணிக்கை ஆக உள்ளது.
ஆனால் மாருதியின் சாம்ராஜியமாக இருந்த சிறிய ரக கார் சந்தையான ஆல்டோ, எஸ்-பிரெஸ்ஸோ விற்பனை 45 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. மாருதியின் சியாஸ் விற்பனை கடுமையாக சரிவடைந்துள்ளது.