Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

20 வருடம்.. 24 லட்சம் வேகன் ஆர் கார்களை விற்பனை செய்த மாருதி சுசுகி

by automobiletamilan
December 18, 2019
in வணிகம்

wagon r

இந்தியாவின் மிகவும் பிரபலமான உயரமானவர்களுக்கு ஏற்ற ஹேட்ச்பேக் காராக அறியப்படுகின்ற மாருதி சுசுகி வேகன் ஆர் இந்திய சந்தையில் வெளியிடப்பட்டு 20 ஆண்டுகளை கடந்து 24 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக முற்றிலும் மேம்பட்ட புத்தம் புதிய வேகன் ஆர் கார் விற்பனைக்கு வெளியிடப்பட்ட நிலையில் தொடர்ந்து அமோகமான ஆதரவை தக்க வைத்துக் கொண்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளராக விளங்கும் மாருதி நிறுவனம் டிசம்பர் 25, 1999 ஆம் ஆண்டில் வேகன் ஆர் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு வெளியிட்டது

விற்பனைக்கு வெளியிடப்பட்ட ஐந்து வருடங்களுக்கு பிறகு முதல் 1 லட்சம் இலக்கை கடந்த வேகன் ஆர், 2010 ஆம் ஆண்டு இரண்டாம் தலைமுறை வேகன் ஆரும், அதன் பிறகு 2013 ஆம் வேகன்ஆரின் ஸ்டிங்கரே வெளியிடப்பட்டது. தற்போது முற்றிலும் மாறுபட்ட மாடல் விற்பனைக்கு கிடைக்கின்றது

மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிர்வாக இயக்குனர் (சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை) ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், “இரண்டு தசாப்த கால வேகன் ஆரின் நம்பமுடியாத மற்றும் வெற்றிகரமான பயணத்தை கொண்டாடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். செயல்திறன் மற்றும் யுட்டிலிட்டிக்கு ஏற்ற பாரம்பரியத்தை உருவாக்கி, வேகன்ஆர் வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் காலத்திற்கு ஏற்ப சிறப்பான செயல் திறனை கொண்டுள்ளது. ”

மேலும் அவர் கூறுகையில், “வேகன் ஆரின் நான்கு வாடிக்கையாளர்களில் ஒருவர் மீண்டும் வேகன் ஆரை தேர்வு செய்வதற்காக திரும்பி வருவதால், இது பிராண்டுக்கான வலுவான வாடிக்கையாளர் உறவையும் வெளிப்படுத்துகிறது. எங்களுடைய மற்ற மாடல்களுக்கு இதுபோன்ற வாடிக்கையாளர் விருப்பத்தை நாங்கள் காணவில்லை. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நன்றி வேகன் ஆர் மீதான அவர்களின் நம்பிக்கைக்காக, அது மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகின்றது. ” என குறிப்பிட்டுள்ளார்.

Maruti WagonR to complete two decades

வேகன் ஆர் என்ஜின்

1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 91 பிஎஸ் மற்றும் 118 என்எம் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

மாருதி வேகன்ஆர் காரின் 1.2 லிட்டர் என்ஜின் ARAI மைலேஜ் லிட்டருக்கு 21.5 கிமீ ஆகும். சராசரியான ஓட்டுதல் மைலேஜ் சுமார் 15-16 கிமீ வழங்கலாம்.

புதுப்பிக்கப்பட்டுள்ள K10B 1.0 லிட்டர் 67 bhp பவர் மற்றும் 90 NM டார்க் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனுடன் விற்பனை செய்யப்படுகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனலாக இடம்பெறுகின்றது.

மாருதி வேகன்ஆர் காரின் 1.0 லிட்டர் என்ஜின் ARAI மைலேஜ் லிட்டருக்கு 22.5 கிமீ ஆகும். சராசரியான ஓட்டுதல் மைலேஜ் சுமார் 17-18 கிமீ வழங்கலாம்.

மேலும் படிங்க – மாருதி சுசுகி வேகன் ஆர் சிறப்புகள்

Tags: Maruti SuzukiMaruti Suzuki Wagon rமாருதி சுசுகிமாருதி சுசுகி வேகன் ஆர்
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version