இந்தியாவில் சீன ஆட்டோமொபைல் எஸ்.ஏ.ஐ.சி குழுமத்தின் தலைமையின் கீழ் செயல்படும் இங்கிலாந்து நாட்டின் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்த 6 ஆண்டுகளில் ரூ.5000 கோடி முதலீட்டை இந்திய மோட்டார் துறையில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

எம்ஜி மோட்டார்ஸ் இந்தியா

சீன ஆட்டோமொபைல் சந்தையில் எஸ்.ஏ.ஐ.சி., நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆதரவுடன் குஜராத் மாநிலத்தில் அமைந்து ஹலால் வாகன தொழிற்­சாலை கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டது. இதன் விரி­வாக்­கத்­திற்­காக, ஏற்­க­னவே, 2,000 கோடி ரூபாய் முத­லீடு செய்­யப்­பட்டு உள்­ளது.

2019 ஆம் ஆண்டின் மத்தியில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முதல் எஸ்யுவி மாடல் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு ஆரம்ப கட்ட பணிகளை எம்ஜி மோட்டார்ஸ் தொடங்கியுள்ளது. 2019 ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு ஒரு கார் மாடலை வெளியிட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மிகவும் சவா லான விலையில் அறிமுகம் செய்யப்பட உள்ள கார்கள் 80 சதவீத பாகங்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய மோட்டார் சந்தையில் எதிர்கால மாற்றங்களுக்கு ஏற்ற வகையிலான எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் வாகனங்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளை மேற்கொள்வதுடன், அடுத்த சில ஆண்டுகளில் நாடு முழுவதும் , சுமார் 300 டீலர்களை ஆரம்ப கட்டமாக தொடங்க இந்நிறுவனம் திட்டமிட்டு வருகின்றது.

தற்­போது இந்நிறு­வ­னத்­தில், 150 பேர் பணி­பு­ரி­கின்­ற­னர். இது, இந்­தாண்டு இறு­திக்­குள், 1,000 ஆக அதி­க­ரிக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது