நிசான் இந்தியா மற்றும் டட்சன் பிராண்டுகளின் புதிய நிர்வாக இயக்குநராக ராகேஷ் ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார். 22 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்டோமொபைல் துறையில் அனுபவமிக்கவராக விளங்குகிறார்.
ஸ்ரீவாஸ்தவா கடந்த காலங்களில் ஹூண்டாய் மற்றும் மாருதி சுசுகி நிறுவனங்களில் பணிபுரிந்தார், மேலும், ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தில் தனது சமீபத்திய பணியை முடித்த பின்னர் நிசானுடன் இணைந்துள்ளார்.
நிசான் இந்தியா தலைவர் சினன் ஓஸ்கோக் நியமனம் குறித்து கூறுகையில், “ராகேஷை நிசான் இந்தியா அணிக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது சிறந்த அனுபவம் மற்றும் இந்திய சந்தையைப் பற்றிய ஆழமான புரிதலுடன், அவர் எங்கள் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் செயல்பாடுகளை வலுப்படுத்துவார் மற்றும் எங்கள் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட வெற்றிகரமாக வழங்குவார் என்று நான் நம்புகிறேன். ” என குறிப்பிட்டுள்ளார்.
ராகேஷ் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், “இந்தியாவில் உள்ள நிசான் குழும வாடிக்கையாளர்கள், கூட்டாளர்கள் மற்றும் ஊழியர்களுக்காக இந்நிறுவனத்தை பலப்படுத்தும் வாய்ப்பால் நான் மகிழ்ச்சியடைகிறேன். நிசான் உலகளாவிய பிராண்டாகும், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளில் அதன் தலைமை இந்த போட்டி சந்தையில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மதிப்பை ஏற்படுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.