Categories: Auto Industry

பிஎம் இ-டிரைவ் மூலம் எலெக்ட்ரிக் டூ வீலர் விலை அதிகரிக்குமா..!

pm e drive subsidy

புதிதாக நடைமுறைக்கு வரவுள்ள பிஎம் இ-டிரைவ் (PM E-Drive) எனப்படுகின்ற எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஊக்கத்தொகை அல்லது மானியம் முதல் ஆண்டில் எவ்வளவு கிடைக்கும் இரண்டாம் ஆண்டில் எவ்வளவு கிடைக்கும் என்ற விபரங்கள் தற்பொழுது வெளியாகி இருக்கின்றது.

ஆரம்ப காலத்தில் FAME மற்றும் FAME-II என இரண்டிலும் மானியத் தொகை அதிகமாக வழங்கப்பட்டு வந்த நிலையில் படிப்படியாக ஃபேம்-2 முதல் மானியம் குறைக்க துவங்கப்பட்டது இந்த நிலையில் தற்பொழுது நடைமுறையில் உள்ள EMPS 2024ல் 1Kwh பேட்டரிக்கு ஐந்தாயிரம் ரூபாய் அல்லது ஒட்டுமொத்த வாகனத்தின் விலையில் ரூபாய் 10,000 அதிகபட்சமாக வழங்கப்படுகின்றது.

நடைமுறைப்படுத்த உள்ள பிஎம் இ-டிரைவ் திட்டத்திலும் இதே மானியம் தொடரும் என்பதனால் முதல் ஒரு ஆண்டிற்கு எவ்விதமான விலையிலும் மாற்றம் இருக்காது. ஆனால் இரண்டாவது ஆண்டில் மானியம் ரூபாய் அதிகபட்சமாக எலக்ட்ரிக் இரு சக்கர வாகனத்திற்கு ஐந்தாயிரம் மட்டுமே வழங்கப்படும் அல்லது 1Kwh பேட்டரிக்கு ரூ.2,500 மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்து எலக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்களுக்கு தற்பொழுது நடைமுறையில் உள்ள  ரூ.50,000 மானியம் முதல் ஆண்டில் தொடரும்., அடுத்து இரண்டாவது ஆண்டில் மானியம் ரூபாய் 25,000 ஆக குறைக்கப்பட உள்ளது.

மேலும் பிஎம் இ- டிரைவ் மானியம் பெறுவதற்கு சிறப்பு இ-வவுச்சர் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ரூ.500 கோடி எலெக்ட்ரிக் டிரக் வாங்குபவர்களுக்கு மானியம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பழைய டிரக்கினை ஸ்கிராப் செய்த சான்றிதழ் இருந்தால் மட்டுமே மானியம் வழங்கப்பட உள்ளது. மேலும் ஒவ்வொரு இ-டிரக்குகளுக்கு எவ்வளவு மானியம் வழங்கப்படும் என இன்னும் இறுதி செய்யப்படவில்லை என கனரக தொழில்துறை அமைச்சர் ஹெச்.டி குமாரசாமி தெரிவித்துள்ளார்.