ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம், சென்னையில் முதன்முறையாக பயன்படுத்திய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களை மட்டும் விற்பனை செய்யும் வகையில் வின்டேஜ் என்ற பெயரில் யூஸ்டு புல்லட்களை இனி என்ஃபீல்டு நிறுவனத்தின் தரத்துடன் பெறலாம்.
ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்
தனது 117 ஆண்டுகால பாரம்பரியத்தில் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் பல்வேறு மாற்றங்களை நவீன உலகிற்கு ஏற்ற வகையில் மாற்றியமைத்து வரும் சூழ்நிலையில், பயன்படுத்தப்பட்ட என்ஃபீல்டு பேட்ஜ் உள்ள மாடல்களை மட்டுமே வின்டேஜ் விற்பனை நிலையங்களில் விற்பனை செய்ய உள்ளது.
பயன்படுத்தப்பட்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட என்ஃபீல்ட் மோட்டார்சைக்கிள்களை தனது விண்டேஜ் ஷோரூம்கள் வழியாக விற்பனை செய்ய உள்ள நிலையில் முதற்கட்டமாக சென்னை, பள்ளிக்கரணை வேளச்சேரி மெயின் ரோட்டில் எண் . 27 மைலை பாலாஜி நகரில் அமைந்துள்ளது.
வின்டேஜ் ஸ்டோர்களில் விற்பனை மட்டுமல்லாமல், ஃபைனான்ஸ், வாகன காப்பீடு, வாரன்டி மற்றும் விற்பனைக்கு பிந்தைய சர்வீஸ் சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களை வாங்கலாம் என இந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
விண்டேஜ் ஷோரூம்களில் விற்பனை செய்யப்பட உள்ள ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் 92 புள்ளிகளை கொண்ட தர பரிசோதனைகள் மூலம் வாகனத்தின் தரம் மற்றும் எதிர்காலத்திற்கு சர்வீஸ் சார்ந்த உண்மையான உதிரிபாகங்கள் கிடைக்கப் பெற வழிவகுக்கப்பட உள்ளது. மேலும் இந்த வருடத்திற்குள் 1௦ வின்டேஜ் விற்பனையகத்தை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.