ஐஷர் மோட்டார் நிறுவனத்தின் கீழ் செயல்படும் பாரம்பரியம் மிக்க ராயல் என்ஃபீல்டு அக்டோபர் 2017 மாதந்திர விற்பனையில் 69,493 அலகுகளை விற்பனை செய்து முந்தைய ஆண்டுடன் ஒப்பீடுகையில் 18 % வளர்ச்சி பெற்றுள்ளது.
பைக் விற்பனை – அக்டோபர் 2017
இந்தியா மற்றும் சர்வதேச அளவில் என்ஃபீல்டு நிறுவனத்தின் 350சிசி பிரிவில் உள்ள புல்லட் 350, கிளாசிக் 350, தண்டர்பேர்டு 350, ஆகிய பைக்குகள் இந்நிறுவனத்தின் மத்த விற்பனையில் 93 % பங்களிப்பை அதாவது 65,209 அலகுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கிளாசிக் 500,புல்லட் 500, ஹிமாலயன், காண்டினென்டினல் ஜிடி ஆகியவை வெறும் 4,283 அலகுகள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளது.
சர்வதேச அளவில் 1478 அலகுகள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 98 % வளர்ச்சியை பெற்றுள்ளது.
சமீபத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் டார்க் எடிசன் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள கன் மெட்டல் கிரே 350 மற்றும் செல்த் பிளாக் 500 ஆகிய இரண்டு மாடல்களை வெளியிட்டுள்ளது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புதிய 750சிசி எஞ்சின் பெற்ற கான்டினென்டினல் ஜிடி மற்றும் இன்டர்செப்டார் 750 ஆகிய இரு மாடல்களை இஐசிஎம்ஏ 2017 அரங்கில் வெளியிடும் வாய்ப்புகள் உள்ளது.