சர்வதேச அளவில் டாடா மோட்டார்ஸ், மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் 2018 ஆம் ஆண்டில் 1 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்து உலகின் 16வது மிகப்பெரிய வாகன தயாரிப்பாளராகவும், மிக வேகமாக வளரும் நிறுவனங்களில் டாடா மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.
ஜாகுவார் லேண்ட்ரோவர் உட்பட டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் உட்பட வர்த்தக வாகனங்களும் விற்பனையில் அடங்கும். கடந்த 2017-ல் 9.86 லட்சமாக இருந்த விற்பனை , கடந்த ஆண்டில் 10 லட்சத்தை முதன்முறையாக கடந்த இந்திய நிறுவனம் என்ற பெருமையை டாடா படைத்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் விற்பனை அதிகரிப்பு
நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கடந்த 2018-ல் தனது கார்கள், வர்த்தக ரீதியான வாகனங்கள் உட்பட மொத்தமாக 1.049 மில்லியன் வாகனங்களை விற்றுள்ளது. இதன் மூலம் 1 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்த முதல் இந்திய வாகன தயாரிப்பாளர் என்ற பெருமையுடன், சர்வேச அளவில் விற்பனையின் அடிப்படையில் 16வது இடத்தை இந்நிறுவனம் பெற்றுள்ளது.
மேலும் உலகின் மிக வேகமாக வளரும் டாப் 20 ஆட்டோமொபைல் நிறுவனங்களில் , டாட்டா மூன்றாவது இடத்தை பெற்றதாக உள்ளது. இந்நிறவனத்தின் மொத்த விற்பனையில் 90 சதவீத வாகனங்கள் இலகுரக வாகனங்களாகும். தற்போது டாடா நிறுவன மாடல்கள் 54 நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றது.
இந்நிறுவனத்தின் டாடா டியாகோ, டிகோர், நெக்ஸான், ஹெக்ஸா, மற்றும் ஹாரியர் போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றது. சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் ஜெனிவா மோட்டார் ஷோவில் வெளியிட்ட டாடா அல்ட்ரோஸ், மைக்ரோ எஸ்யூவி மாடலான ஹெச்2எக்ஸ் மற்றும் 7 இருக்கை பெற்ற டாடா பஸார்டு ,இதுதவிர தொடக்க நிலை ஹேட்ச்பேக் கார் ஒன்றை டாடா வடிவமைக்க உள்ளது.