இந்தியாவின் முன்னணி மோட்டார் வாகன தயாரிப்பாளராக விளங்கும் டாடா மோட்டார்ஸ், வருகின்ற ஏப்ரல் 1 முதல் கார்கள் மற்றும் எஸ்யூவி விலையை அதிகபட்சமாக ரூ.60,000 வரை உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் கார் விலை உயர்வு

இந்தியாவின் பயணியர் வாகன சந்தையில் மிக சவாலான நிறுவனமாக உருவெடுத்து வரும் டாடா மோட்டார்ஸ் குறைந்தபட்ச விலை கொண்ட நானோ கார் முதல் அதிகபட்ச விலை பெற்ற ஹெக்ஸா க்ராஸ்ஓவர் எம்பிவி மாடல் வரை சந்தையில் விற்பனை செய்து வருகின்றது.

விலை உயர்வு குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து  வரும் உற்பத்தி செலவீனத்தை ஈடுகட்டும் நோக்கில், சந்தையில் மாற்றம் மற்றும் வெளிப்புற பொருளாதார மாற்றங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு விலை உயர்வ ஐ அதிகபட்சமாக ரூ.60,000 வரை விலையை ஏப்ரல் 1ந் தேதி முதல் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், சமீபத்தில் அறிமுகம் செய்த மாடல்களான டியாகோ , டீகோர், ஹெக்ஸா மற்றும் நெக்ஸான் எஸ்யூவி போன்ற மாடல்கள் அபரிதமான வளர்ச்சியை பெற்று வருவரு குறிப்பிடதக்கதாகும்.

இந்நிறுவனத்தை தவிர , ஆடி நிறுவனம் ரூ.9 லட்சம் வரை , டட்சன் , நிசான் ஆகிய இரு நிறுவனங்களும் 2 % விலை உயர்வினை அமலுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.