நவராத்திரி துவங்கி தீபாவளி என பண்டிகை காலத்தை முன்னிட்டு வாகன விற்பனை எண்ணிக்கை கனிசமாக உயர தொடங்கியுள்ள நிலையில் டாப் 10 கார்கள் பட்டியலில் இடம்பெற்ற மாடல்களை மாதந்திர அக்டோபர் 2020 விற்பனை விபரத்தை அறிந்து கொள்ளலாம்.

தொடர்ந்து இந்திய பயணிகள் வாகன சந்தையில் மாருதி சுசூகி கார்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஹூண்டாய் மற்றும் கியா என இரு நிறுவனங்களும் காம்பேக்ட் எஸ்யூவி சந்தையை கைபற்ற துவங்கியுள்ளன.

மொத்தமுள்ள 10 இடங்களில் 7 இடங்களை மாருதியும், 3 இடங்களை ஹூண்டாய் நிறுவனமும் கைப்பற்றியுள்ளது. புதிதாக வந்த கியா நிறுவனத்தின் சொனெட் எஸ்யூவி அமோகமான வரவேற்பினை பெற்று பட்டியலில் இடம்பிடித்திருப்பதுடன் காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் விட்டாரா பிரெஸ்ஸா காருக்கு அடுத்தப்படியாக உள்ளது.

விற்பனையில் டாப் 10 கார்கள் – அக்டோபர் 2020

வரிசை தயாரிப்பாளர்/ மாடல் அக்டோபர் 2020
1 மாருதி ஸ்விஃப்ட் 24,589
2 மாருதி பலேனோ 21,971
3 மாருதி வேகன் ஆர் 18,703
4 மாருதி ஆல்டோ 17,850
5 மாருதி டிசையர் 17,675
6 ஹூண்டாய் கிரெட்டா 14,023
7 ஹூண்டாய் கிரான்ட் i10 Nios 14,003
8 மாருதி ஈக்கோ 13,309
9 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா 12,087
10 கியா சொனெட் 11,721

 

web title : Top 10 Selling Cars of October 2020