உலகின் மிகப்பெரிய வாகன சந்தைகளில் ஒன்றான நமது நாட்டின் மொத்த கார் மற்றும் எஸ்யூவி விற்பனையில் மாருதி சுசுகி முதலிடத்தில் உள்ளது. மாதந்திர விற்பன்னையில் ஜூன் 2017 -ல் டாப் 10 கார்கள் பற்றி அறியலாம்.
டாப் 10 கார்கள் – ஜூன் 2017
ஜிஎஸ்டிக்கு முந்தைய மாதமாக கருதப்படுகின்ற ஜூன் மாதத்தில் ஆல்ட்டோ கார் உள்ளிட்ட பெரும்பாலான மாடல்கள் சரிவையே சந்தித்துள்ளன. நாட்டின் முன்னணி மாருதி சுசுகி நிறுவனத்தின் 6 மாடல்கள் கைப்பற்றியுள்ளது.
மாருதி ஆல்டோ
முந்தைய மாதங்களை ஒப்பீடுகையில் சராசரியாக 20 ஆயிரம் கார்களை விற்பனை ஆகின்ற ஆல்டோ விற்பனை 14 ஆயிரத்து 856 என மிகவும் கடுமையாகவே பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாட்டின் முதன்மையான காராக தொடர்ந்து விளங்குகின்றது.
ஹூண்டாய் கிராண்ட ஐ10
நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தயாரிப்பாளரான ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 இரண்டாவது இடத்தை எட்டிப்பிடித்துள்ள நிலையில் அதன் விற்பனை எண்ணக்கையில் பெரிய மாற்றங்கள் இல்லாமல் தொடர்ந்து சீராகவே 12 ஆயிரத்து 317 கார்களை விற்பனை செய்துள்ளது.
மாருதி டிசையர்
புதிய தலைமுறை டிசையர் வருகைக்கு பின்னர் தற்போது வேகத்தை அதிகரிக்க தொடங்கியுள்ள டிசையர் மொத்தம் 12 ஆயிரத்து 409 கார்கள் விற்பனை செய்துள்ளது.
மாருதி வேகன்ஆர்
முதல் 10 இடங்களில் இரண்டு அல்லது மூன்றாவது இடங்களை பிடித்து வரும் வேகன்ஆர் பட்டியில் மட்டுமல்லாமல் விற்பனையிலும் சரிந்து 10 ஆயிரத்து 668 கார்களை மட்டுமே விற்றுள்ளது.
மாருதி ஸ்விஃப்ட்
புதிய தலைமுறை ஸ்விஃபட் அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களிலே அறிமுகம் செய்யப்பட்ட இருந்தாலும் மந்தமான விற்பனையே சில மாதங்களாக பெற்று வரும் நிலையில் 9,902 அலகுகள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளது.
மாருதி பலேனோ
மாருதியின் முதல் பிரிமியம் ரக மற்றும் வெற்றி பெற்ற ஹேட்ச்பேக் மாடலாக விளங்கும் பலேனோ தனது போட்டியாளரான எலைட் ஐ20 காரை விட 49 கார்களை மட்டுமே கூடுதலாக விற்பனை செய்து 9 ஆயிரத்து 57 கார்களை விற்பனை செய்துள்ளது.
ஹூண்டாய் எலைட் ஐ20
நேரடியான போட்டியாளரை விட 49 அலகுகளை குறைவாக விற்பனை ஹூண்டாய் எலைட் ஐ20 7 வது இடத்தை பெற்று 9007 கார்களை விற்பனை செய்துள்ளது.
மாருதி விட்டாரா பிரெஸ்ஸா
ஜூன் மாத விற்பனையில் எஸ்யூவி ரகத்தில் இடம்பெற்ற ஒரே மாடலான விட்டாரா பிரெஸ்ஸா மஹிந்திராவின் யூட்டிலிட்டி சாம்ராஜ்யத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்குகின்றது. கடந்த மாதம் 8293 அலகுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஹூண்டாய் க்ரெட்டா
ஹூண்டாய் க்ரீட்டா பட்டியில் 9வது இடத்தை பிடித்து 6436 கார்களை விற்பனை செய்துள்ளது.
ரெனால்ட் க்விட்
சில மாதங்களாக 10 இடங்களில் இடம்பெற தவறிய க்விட் 5439 கார்களை விற்பனை செய்துள்ளது.
முழுமையான அட்டவனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2017
வ.எண் | மாடல் | ஜூன்-17 |
1 | ஆல்டோ | 14856 |
2 | கிராண்ட் ஐ10 | 12317 |
3 | டிசையர் | 12049 |
4 | வேகன் ஆர் | 10668 |
5 | ஸ்விஃப்ட் | 9902 |
6 | பலேனோ | 9057 |
7 | எலைட் ஐ20 | 9008 |
8 | விட்டாரா பிரெஸ்ஸா | 8293 |
9 | க்ரெட்டா | 6436 |
10 | க்விட் | 5439 |