கடந்த 2018 ஆம் ஆண்டின் இறுதி மாதத்தில் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் விற்பனை சரிவை சந்தித்துள்ளது. வருடத்தின் இறுதி மாதம் என்பதனால் விற்பனை சரிவை சந்தித்திருந்த நிலையில் விற்பனையில் சிறந்து விளங்கிய டாப் 10 கார்கள் பட்டியலை தொடர்ந்து காணலாம்.

டாப் 10 கார்கள் – 2018

2018 ஆம் ஆண்டின் மாதந்திர விற்பனையில்  தொடர்ந்து பெரும்பாலான மாதங்களில் முன்னணி வகித்து வந்த மாருதி டிசையர் கார், வருட இறுதி மாதத்தில் பின்தங்கியுள்ளது. இதன் காரணமாக மாருதி ஆல்டோ முதலிடத்தை பெற்றுள்ளது. முன்முறையாக மாருதி ஈக்கோ பட்டியிலில் இணைந்துள்ளது.

குறிப்பாக மாருதி நிறுவனத்தின் டிசையர், ஸ்விஃப்ட், பலேனோ மற்றும் பிரெஸ்ஸா போன்ற கார்கள் பெரும் பின்னடைவை வருட இறுதியில் பெற்றுள்ளது. ஹூண்டாய் நிறுவன எலைட் ஐ20, கிராண்ட் ஐ 10 மாடல்கள் சீரான வளர்ச்சி பெற்றுள்ளது.

விற்பனையில் டாப் 10 கார்கள் அட்டவனை – டிசம்பர் 2018

வ. எண் தயாரிப்பாளர் டிசம்பர் 2018
1. மாருதி சுசூகி ஆல்டோ 25,121
2. மாருதி சுசூகி டிசையர் 16,797
3. ஹூண்டாய் எலைட் ஐ20 11,940
4. மாருதி சுசூகி ஸ்விஃப்ட் 11,790
5. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 11,450
6. மாருதி சுசூகி பலேனோ 11,135
7. மாருதி சுசூகி விட்டாரா பிரெஸ்ஸா 9,677
8. மாருதி செலிரியோ 9,000
9. மாருதி ஈக்கோ 8,532
10. ஹூண்டாய் க்ரெட்டா (Automobile Tamilan) 7,631