கடந்த 2020 ஆம் ஆண்டின் இறுதி மாதத்தில் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வளர்ச்சியை நோக்கி பயணித்துள்ள நிலையில் டாப் கார்கள் பட்டியலில், மாருதியின் ஆல்ட்டோ காரின் விற்பனையில் எண்ணிக்கை 18,140 ஆக பதிவு செய்துள்ளது.
டாப் 10 இடங்களில் ஹூண்டாய் நிறுவனத்தை தவிர மற்றபடி வேறு எந்த நிறுவனங்களும் இடம் பெறவில்லை. 7 இடங்களை மாருதியும், 3 இடங்களை ஹூண்டாய் நிறுவனமும் கைப்பற்றியுள்ளது.
புதிய ஸ்விஃப்ட் அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வெளியாக உள்ளதால் குறைந்த எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. எஸ்யூவி சந்தையை ஹூண்டாய் நிறுவனம் பெரும்பகுதியை கைப்பற்றியுள்ளது. குறிப்பாக கிரெட்டா, வென்யூ விற்பனையில் முன்னிலை வகிப்பதுடன் முதல் 10 இடங்களில் இடம் பிடித்துள்ளது.
விற்பனையில் டாப் 10 கார்கள் – டிசம்பர் 2020
வரிசை | தயாரிப்பாளர்/ மாடல் | டிசம்பர் 2020 |
1 | மாருதி ஆல்டோ | 18,140 |
2 | மாருதி ஸ்விஃப்ட் | 18,131 |
3 | மாருதி பலேனோ | 18,030 |
4 | மாருதி வேகன் ஆர் | 17,684 |
5 | மாருதி டிசையர் | 13,868 |
6 | ஹூண்டாய் வென்யூ | 12,313 |
7 | மாருதி பிரெஸ்ஸா | 12,251 |
8 | மாருதி ஈக்கோ | 11,215 |
9 | ஹூண்டாய் கிரெட்டா | 10,592 |
10 | ஹூண்டாய் கிராண்ட் i10 Nios | 10,263 |