ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்ப்ளெண்டர் ஆகஸ்ட் 2020 மாத விற்பனை எண்ணிக்கையில் 2,32,301 ஆக பதிவு செய்து டாப் 10 பைக்குகள் பட்டியலில் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது. 10 இடங்களில் ஹீரோவின் நான்கு மாடல்கள் இடம்பெற்றுள்ளது.
125சிசி சந்தையில் ஹோண்டா நிறுவனத்தின் சிபி ஷைன் மாடல் 1,06,133 விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து முதலிடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து ஹீரோவின் கிளாமர் பைக் 54,315 ஆக எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. இந்த வரிசையில் டிவிஎஸ் நிறுவனத்தின் மொபெட் மாடல் XL எண்ணிக்கை 70,126 ஆக உள்ளது.
டாப் 10 பைக்குகள் – ஆகஸ்ட் 2020
வ.எண் | தயாரிப்பாளர் | ஆகஸ்ட் 2020 |
1. | ஹீரோ ஸ்ப்ளெண்டர் | 2,32,301 |
2. | ஹீரோ HF டீலக்ஸ் | 1,77,168 |
3. | ஹோண்டா சிபி ஷைன் | 1,06,133 |
4. | பஜாஜ் பல்சர் | 87,202 |
5. | டிவிஎஸ் XL சூப்பர் | 70,106 |
6. | ஹீரோ கிளாமர் | 54,315 |
7. | ஹீரோ பேஸன் | 52,471 |
8. | பஜாஜ் பிளாட்டினா | 40,294 |
9. | பஜாஜ் சிடி | 34,863 |
10. | ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 | 34,791 |
10வது இடத்தில் பிரீமியம் மோட்டார்சைக்கிள் மாடலாக விளங்குகின்ற ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாடல் விற்பனை எண்ணிக்கை 34,791 ஆக உள்ளது.