இந்தியா இரு சக்கர வாகன சந்தையில் மிக கடுமையான போட்டியை ஆக்டிவா மற்றும் ஸ்பிளென்டர் மாடல்களுக்கு இடையை முதலிடத்தை கைப்பற்றும் முனைப்பு போட்டியில் விற்பனையில் டாப் 10 பைக்குகள் ஜூன் 2018 மாதந்திர விபரத்தை தொடர்ந்து அறிந்து கொள்ளலாம்.
கடந்த 2018 ஜூன் மாதந்திர விற்பனையில் ஆக்டிவா மாடல் முந்தைய மாதத்தில் இரண்டாவது இடத்தை பெற்றிருந்த நிலையில் தற்போது முதலிடத்தை பெற்று 2,92,294 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. இதனை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் ஹீரோ ஸ்பிளென்டர் 2,78,169 யூனிட்டுகளை விற்பனை செய்து இரண்டாமிடத்தை கொண்டதாக விளங்குகின்றது.
100-110சிசி சந்தையில் மிக வலுவான பைக் சந்தையை கொண்டு விளங்குகின்ற ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் 125சிசி சந்தை கடந்த சில மாதங்களாக விற்பனையில் பெரிய அளவில் சோபிக்காமல் பின்தங்கி உள்ளது. இந்த பிரிவில் ஹோண்டா சிபி ஷைன் முன்னிலை வகிக்கின்றது.
பஜாஜ் பல்சர் வரிசை தொடர்ந்து இந்திய இளைஞர்களின் கனவு பைக் மாடல்களில் ஒன்றாகவே வலம் வந்து கொண்டிருக்கின்றது. ஜூன் மாத முடிவில் 71,593 யூனிட்டுகள் விற்பனை செயப்பட்டுள்ளது இதனை தொடர்ந்து டிவிஎஸ் எக்எல் சூப்பர் மற்றும் ஸ்கூட்டர் சந்தையில் ஆக்டிவாக்கு சவால் விடுக்கும் டிவிஎஸ் ஜூபிடர் 59,729 யூனிட்டுகளுடன் 10வது இடத்தில் உள்ளது.
தொடர்ந்து முழுமையான 2018 ஜூன் மாத விற்பனை விபர பட்டியலை காண கீழே வழங்கப்பட்டுள்ள அட்டவனையில் காணலாம்.
டாப் 10 பைக்குகள் – மே 2018
வ.எண் | மாடல் | ஜூன் 2018 | மே 2018 |
1 | ஹோண்டா ஆக்டிவா | 2,92,294 | 2,72,475 |
2 | ஹீரோ ஸ்பிளென்டர் | 2,78,169 | 2,80,763 |
3 | ஹீரோ HF டீலக்ஸ் | 1,82,883 | 184,431 |
4 | ஹீரோ பேஸன் | 97,715 | 96,389 |
5 | ஹோண்டா CB ஷைன் | 96,505 | 99,812 |
6 | பஜாஜ் பல்சர் வரிசை | 71,593 | 70,056 |
7 | டிவிஎஸ் XL சூப்பர் | 66,791 | 73,067 |
8 | பஜாஜ் CT 100 | 66,314 | 64,622 |
9 | ஹீரோ கிளாமர் | 63,417 | 72,102 |
10 | டிவிஎஸ் ஜூபிடர் | 59,729 | 58,098 |