பண்டிகை காலத்திலும் டொயோட்டா கார் தயாரிப்பு நிறுவனம் அக்டோபர் மாதத்தில் 6 % வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. ஆனால் முந்தைய செப்டம்பர் மாதத்துடன் ஒப்பீடுகையில் வளர்ச்சி பெற்றுள்ளது. டொயோட்டா அக்டோபரில் 11,866 கார்களை டெலிவரி வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்நிறுவனம் உள்நாட்டு சந்தையில் மொத்தம் 12606 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. இருப்பினும், எட்டியோஸ் செடான் ஏற்றுமதி, 2019 அக்டோபரில் 16 சதவீதம் அதிகரித்து 744 யூனிட்டுகளாக உள்ளது, இது கடந்த வருடத்தின் இதே மாதத்தில் 639 யூனிட்களாக இருந்தது.
பண்டிகை காலம் என்பதனால் விற்பனை சீராக அதிகரித்துள்ளது, 2019 செப்டம்பர் மாதத்தில் 18 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, மாதந்தோறும் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை சரிவு கடந்த மாதத்தில் 6 சதவீதமாக குறைந்துள்ளது.
கடந்த மாத விற்பனையில் இன்னோவா, ஃபார்ச்சூனர் மற்றும் யாரீஸ் கார்கள் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது.