டொயோட்டா கிரிலோஷ்கர் நிறுவனம், கடந்த 2018-19 ஆம் நிதி வருடத்தில் 7 சதவீத வளர்ச்சியை உள்நாட்டு விற்பனையில் பதிவு செய்துள்ளது. நடந்து முடிந்த நிதி வருடத்தில் மொத்தமாக 1,50,525 வாகனங்களை விற்றுள்ளது.
கடந்த 2017-2018 ஆம் வருடத்தில் டொயோட்டா நிறுவனம் மொத்தமாக உள்நாட்டில் மட்டும் 1,40,645 வாகனங்களை விற்பனை செய்திருந்த நிலையில், இந்த ஆண்டில் மொத்தமாக 1,50,525 வாகனங்களை விற்பனை பெற்றுள்ளது.
டொயோட்டா கார் விற்பனை FY2018-19
கடந்த மார்ச் மாதந்திர விற்பனையில் டொயோட்டா 2 சதவீதம் வளர்ச்சியை பெற்றுள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு இதே மாதத்தில் 12,539 கார்களாக இருந்த விற்பனை இந்த ஆண்டு மாரச் மாத முடிவில் 12818 ஆக அதிகரித்துள்ளது.
டொயொட்டா வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர்ந்து இன்னோவா கிரிஸ்டா மற்றும் ஃபார்ச்சூனர் எஸ்யூவி முன்னணி மாடலாக முறையே எம்பிவி மற்றும் பிரிமியம் எஸ்யூவி சந்தையில் விளங்குகின்றது.
மேலும் இந்நிறுவனத்தின் காம்பேக்ட் ரக எட்டியோஸ் லிவா காரின் முந்தைய நிதி ஆண்டை விட 13 சதவீத கூடுதல் வளர்ச்சி பெற்றுள்ளது. அடுத்து சமீபத்தில் வெளியிடப்பட்ட கேம்ரி எலக்ட்ரிக் ஹைபிரிட் காருக்கான விற்பனை சிறப்பாக அதிகரித்து வருகின்றது. கடந்த ஜனவரி 2019 முதல் இதுவரை 500க்கு மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ளது.