டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் செப்டம்பர் 2019 மாதத்தில் 10,203 யூனிட்களை உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பரில் 12,512 யூனிட்டுகளை விற்பனை செய்திருந்தது.
இந்த செப்டம்பர் 2019 மாதத்தில் மொத்தம் 10,203 யூனிட்களை உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் மொத்தம் 10,911 யூனிட்டுகளை ஏற்றுமதி செய்துள்ளது. டொயோட்டா நிறுவனம் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் மொத்தம் 12,512 யூனிட்டுகளை உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்தது. இது 2019 செப்டம்பர் மாதத்தில் மொத்த விற்பனை 17 சதவீதம் சரிந்தது. ஆகஸ்ட் 2019 இல் விற்பனையில் சரிவு 24 சதவீதமாக இருந்தது குறிப்பிடதக்கதாகும்.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் துணை நிர்வாக இயக்குனர் என்.ராஜா கூறுகையில், “செப்டம்பர் மாதத்தில் நுகர்வோர் வாங்கும் எண்ணம் குறைவாகவே உள்ளது. தொழில்துறையின் விற்பனை மந்தநிலையை பிரதிபலிக்கிறது. நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகை விற்பனை மிகச்சிறப்பானதாக அமையும் என எதிர்பார்க்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.