Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

மத்திய அமெரிக்கா நாடுகளில் களமிறங்கும் டிவிஎஸ்

by automobiletamilan
May 13, 2017
in வணிகம்

தமிழகத்தின் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள 5 நாடுகளில் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்வதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக MASESA என்ற நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது.

டிவிஎஸ் மத்திய அமெரிக்கா

குவாத்தமாலா நாட்டைச் சேர்ந்த MASESA என்ற நிறுவனத்துடன் இணைந்து மத்திய அதெரிக்காவில் உள்ள  குவாத்தமாலா, எல் சால்வடோர், ஹோண்டுராஸ், நிகராகுவா மற்றும் கோஸ்டா ரிகா என 5 நாடுகளுக்கு மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோ ரிக்ஷா போன்றவற்றை விற்பனை செய்வதற்காக 500 டீலர்களை நிறுவ திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து  டிவிஎஸ் நிறுவனத்தின் சர்வதேச வர்த்தக பிரிவு துணை தலைவர் – திலீப் கூறியதாவது :-

MASESA நிறுவனம் மத்திய அமெரிக்காவில் மிக பிரபலமான நிறுவனமாக விளங்கி வருகின்றது. அந்நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவது மிக சிறப்பான வாய்ப்பாக அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

5 நாடுகளிலும் டிவிஎஸ் நிறுவனத்தின் 13 மாடல்களை விற்பனை செய்ய 500க்கு மேற்பட்ட விற்பனை மையங்களை திறக்க திட்டமிட்டிருப்பதுடன், அடுத்த மூன்று ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து ரூபாய் 500 கோடி வருமானத்தை ஈட்டுவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது.

இதுதவிர ஏற்றுமதி செய்யப்பட உள்ள வாகனங்களை தவிர்த்து புதிதாக பிராந்தியங்களுக்கு ஏற்ற வகையிலான வாகனங்களை வடிவமைக்கும் பணிகளையும் டிவிஎஸ் மோட்டார் திட்டமிட்டு வருகின்றது.

இந்தியா மற்றும் இந்தோனேசியா நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட உள்ள வாகனங்களின் விபரங்கள் பின் வருமாறு –

 இந்தியாவிலிருந்து 

இந்தோனசியா 

ஏற்றுமதி

 ஸ்கூட்டர்  Scooty Zest 110 and Wego 110  Max 125 and Neo 110

 மோட்டார்

சைக்கிள்  

 StaR HLX 100/125, Sport 100 ES, Phoenix 125, Stryker 125, Apache 160/180/200  NA
 3 வீலர்     TVS King DLX  NA

Tags: TVS
Previous Post

புதிய மாருதி டிசையர் கார் கலர்களில் ஒரு பார்வை

Next Post

டிஜிட்டல் முறை வாகன விற்பனை அதிகரிக்கும் – சர்வே

Next Post

டிஜிட்டல் முறை வாகன விற்பனை அதிகரிக்கும் - சர்வே

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version