டிவிஎஸ் மோட்டாரின் பிரசித்தி பெற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஐக்யூப் மாடலை இத்தாலி, இலங்கை மற்றும் நேபாளம் போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்நிறுவனம் தொடங்கியுள்ளது.
இத்தாலியில் சில வாரங்களுக்கு முன்பாக விற்பனையை துவங்கிய டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஐக்யூப், X மட்டுமல்லாமல் என்டார்க் உள்ளிட்ட பல்வேறு பெட்ரோல் மாடல்களையும் அறிமுகம் செய்துள்ளது.
இந்திய சந்தையில் டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் 2.2kwh, 3.4kwh மற்றும் 5.1kwh என மூன்று விதமான பேட்டரி பெற்றதாக 5 விதமான வேரியண்ட் அமைந்துள்ளது. 75 கிமீ முதல் 150 கிமீ ரேஞ்ச் வழங்குகின்றது.
இலங்கையில் வெளியிடப்பட்டுள்ள iQube விலை LKR 10,99,760 (ரூ. 304,933) விலையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் உள்ள TVS லங்கா டீலர்ஷிப்களில் டெஸ்ட் டிரைவ் மற்றும் முன்பதிவும் துவங்கப்பட்டுள்ளது. விரைவில் இலங்கை முழுதும் கிடைக்க உள்ள டிவிஎஸ் iQube ஐ வாங்குபவர்களுக்கு டவுன் பேமென்ட் LKR 110,000 (ரூ 30,500) மற்றும் மலிவு விலையில் LKR 27,000 (ரூ 7,486) முதல் கிடைக்கும்.