வால்வோ ஐஷர் (VECV) வர்த்தக வாகனங்கள் பிரிவு 2023 மே மாதம் முடிவில் ஒட்டு மொத்தமாக 6,289 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. முந்தைய ஆண்டு இதே மாதம் 5,637 எண்ணிக்கையை பதிவு செய்து 11.6 விழுக்காடு வளர்ச்சி பெற்றுள்ளது.
மொத்த உள்நாட்டு விற்பனை ஆண்டு அடிப்படையில் 15.8% அதிகரித்து, மே 2023 முடிவில் 5,826 வாகனங்களாக அதிகரித்துள்ளது. மே 2022-ல் 5033 ஆக இருந்தது. மொத்த ஏற்றுமதிகள் 46.9% சரிவைக் கண்டன, முந்தைய ஆண்டில் 471 எண்ணிக்கையில் இருந்து 250 ஆக சரிந்துள்ளது.
வால்வோ டிரக்குகள் மற்றும் வால்வோ பேருந்துகள் மே 2022-ல் 133 எண்ணிக்கையில் இருந்த விற்பனை 2023 மே மாதத்தில் 213 ஆக அதிகரித்து 60.2% வளர்ச்சி அடைந்துள்ளது.