ஃபார்ச்சூனருக்கு எதிராக களமிறங்கும் மஹிந்திரா எஸ்யூவி

0

இந்தியாவின் முன்னனி வாகன தயாரிப்பாளரான மஹிந்திரா நிறுவனம் ஃபார்ச்சூனர் எஸ்யூவி மாடலுக்கு போட்டியாக புதிய பிரிமியம் மஹிந்திரா எஸ்யூவி மாடலை களமிறக்க திட்டமிட்டுள்ளது.

ssangyong liv2 concept

Google News

இந்தியாவில் விற்பனையில் உள்ள பிரபலமான பிரிமியம் எஸ்யூவி மாடல்களான ஃபார்ச்சூனர் ,எண்டேவர் போன்றவைகளுக்கு கடும் சவாலினை ஏற்படுத்தும் வகையில் இந்த புதிய மஹிந்திரா மாடலை Y400 என்ற திட்டத்தின் பெயரில் தயாரித்து வருகின்றது. மஹிந்திராவின் சேங்யாங் நிறுவனத்தின் ரெக்ஸ்டான் மாடல் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யாத காரணத்தினால் வரவுள்ள இந்த புதிய மாடல் மஹிந்திரா பிராண்டிலே வரவுள்ளது.

புதிய தலைமுறை ரெக்ஸ்டான் மாடல் தென்கொரியாவில் தயாராகி வருகின்ற நிலையில் இந்த மாடலையே பல்வேறு மாறுதல்களை செய்து இந்திய சந்தைக்கு ஏற்ப தயாரிக்கப்பட உள்ள புதிய எஸ்யூவி காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களுடன் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த பாரீஸ் மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட LIV-2 கான்செப்ட் மாடலை அடிப்படையாக கொண்ட இந்த மாடலின் நீளம் 4,850மிமீ . 1,960மிமீ அகலமும், 1,800மிமீ உயரமும் கொண்டதாக இருக்கும்.

ssangyong liv2 concept dashboard

புதிய மஹிந்திரா எஸ்யூவி

உறுதியான கட்டமைப்பினை வெளிப்படுத்தும் வகையில் லேடர் ஃப்ரேம் அடிச்சட்டத்தினை கொண்டு கட்டமைக்கப்பட உள்ள இந்த மாடலில் 184 ஹெச்பி பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 2.2 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கலாம்.

இது தவிர 225 ஹெச்பி பவரையும்,  349 என்எம் டார்க்கை வழங்கும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கலாம். மேலும் இரு எஞ்சின்களிலும் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனலாக கிடைக்கும்.

உறுதியான கட்டமைப்புடன் பல்வேறு குறிப்பிடதக்க வசதிகளை இன்டியரில் பெற்றிருக்கும்.அவை .2 அங்குல தொடு திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ போன்ற ஸ்மார்ட்போன் ஆதரவு செயலிகள் , வைபை மற்றும் தாரளமான இடவசதியை கொண்டதாக விளங்கும்.

ssangyong liv2 concept rear

மேலும் பாதுகாப்பு அம்சங்களில் 6 முதல் 9 காற்றுப்பைகள் வரை இடம்பெற்று , தானியங்கி பிரேக்கிங் சிஸ்டம் போன்றவை சர்வதேச அளவிலான மாடல்களில் பெற்றிருக்கும். சாங்யாங் நிறுவனம் சர்வதேச அளவில் இந்த புதிய மாடலை கட்டமைக்க உள்ளதால் பல்வேறு வசதிகள் இந்திய மாடலில் குறைவாக இருந்தாலும் போட்டியாளரை விட கூடுதலாகவும் விலை சற்றுகுறைவாகவும் அமையும். மேலும் இதே கான்செப்ட் மாடலை அடிப்படையாக கொண்ட பிக்கப் ரக டிரக் மாடலை டொயோட்டா ஹைலக்ஸ் மற்றும் ஃபோர்டு ரேஞ்சர் மாடலுக்கு எதிராக நிலை நிறுத்த உள்ளது. இந்தியாவில் புதிய மஹிந்திரா எஸ்யூவி மாடல் இந்த வருடத்தின் இறுதியில் விற்பனைக்கு வரலாம்.