ஃபியட் புன்ட்டோ ப்யூர் வருகை ?

ஃபியட் புன்ட்டோ காரின் ப்ரி – ஃபேஸ்லிஃப்ட் மாடலான ஒரிஜினல் புன்ட்டோ காரை புன்ட்டோ ப்யூர் என்ற பெயரில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. புன்ட்டோ ப்யூர் காரில் 3 விதமான வேரியண்டில் வரவுள்ளது.

Fiat-Punto

மூன்று விதமான என்ஜின் ஆப்ஷனில் புன்ட்டோ மாடல் வரலாம். அவை 1.2 லிட்டர் மற்றும் 1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் , 1.3 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 68பிஹெச்பி ஆற்றலை வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் இதன் டார்க் 96என்எம் ஆகும். 90பிஹெச்பி ஆற்றலை வழங்கும் 1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் இதன் டார்க் 115என்எம் ஆகும். மேலும் 1.3 லிட்டர் மல்டிஜெட் என்ஜின் ஆற்றல் 75பிஹெச்பி மற்றும் டார்க் 197என்எம் ஆகும். இவை அனைத்திலும் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

கடந்த 2014 ஆம் ஆண்டில் புன்ட்டோ மாடலுக்கு மாற்றாக புன்ட்டோ எவோ மாடலை ஃபியட் விற்பனைக்கு கொண்டு வந்தது. அடுத்த தலைமுறை ஃபியட் புன்ட்டோ மாடல் சோதனை ஓட்டத்தில் உள்ளது. இந்த மாடல் வரும் 2017 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரலாம். அதற்க்கு முன்பாக ஃபேஸ்லிஃட் மாடல் ஒன்றை ஃபியட் களமிறக்குகின்றது. இதில் ஏக்டிவ் , டைனமிக் மற்றும் எமோஷன் வேரியண்ட் இருக்கலாம். ஜனவரி இறுதியில் புன்ட்டோ ப்யூர் வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.