உலகின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்பட்ட 1.45 மில்லியன் ராம் டிரக்களை ஃபியட் கிறைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் திரும்ப பெற உள்ளது.

ஃபியட் கிறைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் ராம் டிரக்குகளில் டெயில்கேட் பிரச்சினை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அமெரிக்காவில் 1.1 மில்லியன், கனடாவில் 2,60,000, மெக்சிகோவில் 20,000 மற்றும் வட அமெரிக்காவில் 25,000 டிரக்குகளை திரும்ப பெற உள்ளது.

இதுகுறித்து டிரக் தயாரிப்பாளர் தெரிவிக்கையில், பிரச்சினைக்குரிய மாடல்கள், தவறான பவர்-லாக்கிங் மெக்கானிசம் பொருத்தப்பட்டுள்ளது. இதுபோன்று பொருத்துவதால், வாகனம் சென்று கொண்டிருக்கும் போதே டெயில்கேட் தானாக திறந்து கொள்ளும். இதனால், டிரக்கில் ஏற்றப்பட்ட பொருட்கள் கிழே விழுந்து, சாலையில் செல்பவர்களுக்கு இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ராம் 1500, 2500 மற்றும் 3500 மாடல்கள் திரும்ப பெறப்பட உள்ளது. இந்த பிரச்சினையால் எந்த வித விபத்தே, காயமே ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்று கூறியுள்ளனர்.