50 சதவீத பங்ககுளை ரெனால்ட் குழுமத்துக்கு வழங்க ஃபியட் கிறைஸலர் ஆட்டோமொபைல்ஸ் (Fiat Chrysler Automobiles – FCA) நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மீதமுள்ள 50 சதவீத பங்ககுளை ஃபியட் கிறைஸலர் தன் வசம் வைத்துக் கொள்ளவதாக அறிவித்துள்ளது.
இரு நிறுவனங்களுக்கிடைய ஏற்பட உள்ள ஒப்பந்தம் மூலம் புதிய மாடல் தயாரிப்பு, கனெக்கட்டிவிட்டி, மின்சார கார் மற்றும் தானியங்கி கார் போன்ற தயாரிப்பில் இரு நிறுவனங்களும் இணைந்து செயல்பட உள்ளது.
ஃபியட் கிறைஸலர் ஆட்டோமொபைல்ஸ்
ரெனோ குழுமம் முன்பாக நிசான், மிட்ஷூபிஷி போன்ற நிறுவனங்களை தன்வசம் பெற்றுள்ளது. ஃபியட் குழுமம் நிறுவனம், ஃபியட், ஜீப், டைசியா, லாடா, மஸாராட்டி, ஆல்ஃபா ரோமியோ போன்ற நிறுவனங்களை கொண்டுள்ளது. இந்த இணைப்பின் மூலம் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுனவனமாக செயல்பட உள்ளது.
ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய அளவில் கூட்டணியாக இணைந்து நிறுவனங்கள் செயல்பட துவங்கி வருகின்றன. குறிப்பாக டொயோட்டா-சுசுகி நிறுவனங்களை போல பல்வேறு நுட்பங்களை ஃபியட் மற்றும் ரெனோ இரு நிறுவனங்களும் பகிர்ந்து கொள்ள வாய்ப்புகள் உள்ளது.
ரெனோ நிறுவனம், எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் பல்வேறு நுட்பங்களை பெற்று முன்னோடியாக விளங்கி வருகின்றது. அதே போல FCA நிறுவனம் கூகுள் வேமோ, பிஎம்டபிள்யூ மற்றும் ஏப்டிவ் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து தானியங்கி கார் நுட்பங்களை மேம்படுத்தி வருகின்றது.
இரு நிறுவனங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் மூலம், இந்திய சந்தையிலும் புதிய மாடல்களை இந்நிறுவனம் கூட்டாக உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.