ஃபியட் லீனியா 125 எஸ் , புன்ட்டோ 90 hp விற்பனைக்கு அறிமுகம்

ஃபியட் இந்தியா நிறுவனத்தின் லீனியா மாடலின் சக்தி வாய்ந்த காராக லீனியா 125 எஸ் விளங்கும். ஃபியட் லீனியா 125 எஸ் தொடக்க விலை ரூ. 7.82 லட்சத்தில் தொடங்குகின்றது. ஃபியட் புன்ட்டோ மற்றும் அவென்ச்சூரா டீசல் பவர்டெக் மாடல்களும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பவர்ஃபுல்லான கார்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் ஃபியட் நிறுவனத்தின் லீனியா 125 S செடான் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ வாயிலாக அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புன்ட்டொ எவொ மற்றும் அவென்ச்சூரா டீசல் மாடல்கள் 93 hp ஆற்றலை வெளிப்படுத்தும்.

 ஃபியட் லீனியா 125 எஸ்

லீனியா 125 எஸ் டி-ஜெட் காரில் சாதரன வேரியண்டை விட கூடுதலாக 11 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 125 hp ஆற்றலை தாரளமாக வெளிப்படுத்தும்.

மேலும் சில கூடுதலான வசதிகளை 125எஸ் பெற்றுள்ளது. அவை 5 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் கூடிய நேவிகேஷன் மற்றும் ரியர் வியூ கேமரா பெற்றுள்ளது. இரு காற்றுப்பைகள் , ஆம்பியன்ட் லைட்டனிங் , 4வீல்களிலும் டிஸ்க் பிரேக் போன்றவற்றை பெற்று விளங்குகின்றது.

ஃபியட் லீனியா 125 S  விலை ரூ. 7.87 லட்சத்தில் தொடங்கும்.

ஃபியட் புன்ட்டோ எவோ மற்றும் அவென்ச்சூரா பவர்டெக் 

93 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.3 லிட்டர்டீசல் என்ஜின் மாடலில் பவர்டெக் பேட்ஜ் புன்ட்டோ மற்றும் அவென்ச்சூரா கார்களில் பெற்றுள்ளது. ஏக்டிவ் , டைனமிக் மற்றும் எமோஷன் என அனைத்து வேரியண்டிலும் கிடைக்கும். மேலும் 5.0 தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் கூடிய நேவிகேஷன் மற்றும் ரியர் வியூ கேமரா சேர்க்கப்பட்டுள்ளது.

ஃபியட் புன்ட்டோ எவோ  விலை ரூ. 6.81 லட்சத்தில் தொடங்கும்

ஃபியட் அவென்ச்சூரா  விலை ரூ. 7.87 லட்சத்தில் தொடங்கும்

{அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை }

Exit mobile version