சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் செப்டம்பர் 1ந் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அசல் உரிமம் இல்லாத வாகன ஓட்டிகளுக்கு  3 மாதம் சிறை அல்லது ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசல் ஓட்டுநர் உரிமம்

செப்டம்பர் 1ம் தேதி முதல் வாகன ஓட்டுநர்கள் அனைவரும் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. அசல் ஓட்டுநர் உரிம்ம இல்லை என்றால் ரூ.500 அபராதம் அல்லது 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சீருடை அணிந்த எந்த காவல் துறை அதிகாரியும் வாகன ஓட்டுநர்களின் அசல் உரிமத்தை கேட்கும்போது காண்பிக்க வேண்டும் என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லைசென்ஸ் இல்லையா ?

மேலும் அரசு வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின் விபரம் பின் வருமாறு ;-

தமிழகத்தில், இந்த ஆண்டு ஜூலை வரை, 9,231 விபத்துக்கள் நடந்து உள்ளன. அவற்றில், 9,881 பேர் உயிரிழந்துள்ளனர். 90 சதவீதத்துக்கும் அதிகமான விபத்துகள், டிரைவர்களின் கவனக்குறைவால் ஏற்படுகின்றன.

இதைக் குறைக்க மோட்டார் வாகன சட்டங்களின்படி வாகன விற்பனையாளர்கள் டிரைவிங் லைசென்ஸ் இல்லாதவர்களுக்கு வாகனங்களை விற்பனை செய்ய கூடாது. அவ்வாறு விற்பனை செய்தால், விற்பனையாளர் குற்றவாளியாக கருதப்பட்டு, அவருக்கு சிறைத் தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டுமோ வழங்கப்படும். அதேபோல, புதிய வாகனத்தை பதிவு செய்யும் முன் வாகன உரிமையாளர் வாகனத்தை ஓட்டுவதற்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அனுமதிக்கக் கூடாது.

ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களுக்கு வாகனங்களை விற்பனை செய்யக்கூடாது என்று போக்குவரத்து காவல்துறை கமிஷனர் அதிரடி சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார். மேலும், புதிய வாகனத்தை பதிவு செய்யும் முன் வாகன உரிமையாளர்கள் வாகனத்தை ஓட்டுவதற்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அனுமதிக்கக்வே கூடாது என்றும் அதில் கூறி உள்ளார்.