அடுத்தடுத்து 4 பைக்குகள் ஹோண்டா அதிரடி

0
ஹோண்டா மோட்டார்சைக்கிள் இந்ந வருடத்தின் இறுதிக்குள் 4 பைக்குகளை விற்பனைக்கு கொண்டு வருவது உறுதியாகியுள்ளது. அவற்றில் சிபி ஹார்னட் 160 ஆர் மற்றும் மிஸ்ட்ரி என்ற பெயரில் டீசர் செய்யப்பட 125சிசி பைக்கும் அடங்கும்.

ஹோண்டா சிபி ஹார்னட் 160 ஆர்
ஹோண்டா சிபி ஹார்னட் 160 ஆர்

வரும் பண்டிகை காலத்திற்க்கு முண்ணிட்டு புதிய 125சிசி பைக் மற்றும் சிபி ஹார்னட் 160ஆர் பைக்கும் விற்பனைக்கு வரலாம். அதனை தொடர்ந்து புதிய சிபிஆர் 150ஆர் மற்றும் சிபிஆர் 250 ஆர் பைக்கும் வரவுள்ளது.

ஹோண்டா சிபிஆர் 150 ஆர்

புதிய சிபிஆர் 150 ஆர் பைக்கில் புதிய வண்ணங்கள் மற்றும் பாடி ஸ்டிக்கரிங் மட்டுமே பெற்ற மாடல் விற்பனைக்கு வரவுள்ளது.

ஹோண்டா சிபிஆர் 250 ஆர்

புதிய சிபிஆர் 250 ஆர் பைக்கில் புதிய வண்ணங்கள் மற்றும் பாடி ஸ்டிக்கரிங் மட்டுமே பெற்ற மாடல் விற்பனைக்கு வரவுள்ளது.

ஹோண்டா சிபி ஹார்னட் 160 ஆர்

150சிசி சந்தையில் பிரிமியம் பைக்காக நிலைநிறுத்தப்பட உள்ள சிபி ஹார்னட் 160 ஆர் பைக்கில் 14.5 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 163சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் விலை சிபி யூனிகார்ன் 160 பைக்கை விட சற்று கூடுதலாக இருக்கும்.

ஹோண்டா 125சிசி பைக் 

வரவிருக்கும் புதிய 125சிசி பைக் மிக சிறப்பான விலையுடன் சவாலான விலையில் எச்இடி நுட்பத்துடன் சிறப்பான மைலேஜ் வழங்கும். இந்த பைக் இன்னும் சில வாரங்களில் விற்பனைக்கு வரலாம்.

Honda to launch 4 motorcycle this year end