அபார்த் புன்ட்டோ காரின் முக்கிய விபரம் #WhoAmI

ஃபியட் அபார்த் புன்ட்டோ மாடல் இன்னும் சில வாரங்களில் வெளிவரவுள்ள நிலையில் முக்கிய விபரங்கள் வெளிவந்துள்ளது. புன்ட்டோ கார் பெர்ஃபாமென்ஸ் ரக மாடலாக மாறியுள்ளது.
அபார்த் புன்ட்டோ

அபார்த் பிராண்டில் ஃபியட் கார்கள் பெர்ஃபாமென்ஸ் ரக காராக மாறி வருகின்றது. முதற்கட்டமாக அபார்த் புன்ட்டோ மாடலும் அதனை தொடர்ந்து ஃபியட் அவென்ச்சுரா காரும் வரவுள்ளது.

பெர்ஃபாமென்ஸ் விரும்பிகளுக்காக வரவுள்ள இந்த காரில் 145எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 212என்எம் ஆகும்.

 0 முதல் 100கிமீ வேத்தினை எட்டுவதற்க்கு 8.8 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். அபார்த் புன்ட்டோ கார் மைலேஜ் லிட்டருக்கு 16.3கிமீ ஆகும்.

ஸ்கார்ப்பியன் லோகோவுடன் வரவுள்ள அபார்த் புன்ட்டோ காரில் 16 ” அலாய் வீல் , 4 வீல்களுக்கும் டிஸ்க் பிரேக் , பாடி முழுதும் ஸ்கார்ப்பியன் ஸ்டிக்கரிங் செய்யப்பட்டிருக்கும்.  அபார்த் புன்ட்டோ கார் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் மட்டுமே வருகின்றது.

இன்னும் சில வாரங்களில் விற்பனைக்கு வரவுள்ள ஃபியட் அபார்த் புன்ட்டோ காரின் விலை ரூ.10 லட்சமாக இருக்கும். ஃபியட் சமூக வலைதளங்களில்  #WhoAmI என்ற பெயரில் டிரென்டிங் செய்யும் வகையில் பிரசாரத்தை தொடங்கியுள்ளது.

Fiat Abarth Punto details

image credits: fiat moto club facebook

Exit mobile version