அப்பாச்சி 200 மாறுதல் பைக்கின் படங்கள்

0

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அப்பாச்சி 200 பைக் ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்த நீண்ட நாளைக்கு பின் முக்கிய மெட்ரோ நகரங்களில் முதற்கட்டமாக டெலிவரி தொடங்கப்பட்டு உள்ள நிலையில் இந்தோனேசியா சந்தையில் மாறுதல் செய்யப்பட்ட அப்பாச்சி 200 4வி பைக்கின் படங்கள் வெளியாகியுள்ளது.

TVS-Apache-Sports-Custom

Google News

ஸ்டீரிட் ஃபைட்டர் ஸ்போர்ட்டிவ் நேக்டூ பைக் மாடலாக விளங்கும் டிவிஎஸ் அப்பாச்சி 200 ஆர்டிஆர் பைக்கில் 21PS ஆற்றலை வெளிப்படுத்தும் 197.7 சிசி என்ஜினில் O3C கம்பஷென் சேம்பர் மூலம் ஆயில் மற்றும் ரேம் ஏர் மூலம் குளிர்விக்கப்படும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 18.1 NM ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. மேலும் இது  FI என்ஜின் ஆகும். இதன் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக் உச்ச வேகம் மணிக்கு 129 கிமீ ஆகும்.

ஆர்டிஆர் 200 4வி பைக்கில் 20.5 PS ஆற்றலை வெளிப்படுத்தும் 197.7 சிசி என்ஜினில் O3C கம்பஷென் சேம்பர் மூலம் ஆயில் மற்றும் ரேம் ஏர் மூலம் குளிர்விக்கப்படும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 18.1 NM ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. மேலும் கார்புரேட்டர் என்ஜின் ஆகும். அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக் உச்ச வேகம் மணிக்கு 128 கிமீ ஆகும்.

[irp posts=”5671″ name=”டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக் வாங்கலாமா”]

 

TVS-Apache-Sports-Custom-front

முதன்முறையாக கார்புரேட்டர் மற்றும் ஏபிஎஸ் இல்லா மாடல்களே டெலிவரி செய்யப்பட்டு வருகின்றது. FI என்ஜினுடன் கூடிய ஏபிஎஸ் மாடல்கள் அடுத்த சில மாதங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தோனேசியாவில் உள்ள டீலர்கள் வழியாக மாறுதல் செய்யப்பட்ட அப்பாச்சி 200 4வி பைக் சூப்பர் பைக்குகளுக்கு இணையாக ஃபேரிங் செய்யப்பட்டு நேர்த்தியாக காட்சியளிக்கின்றது. முகப்பு விளக்கில் தொடங்கி முன்பக்க பக்கவாட்டில் நேர்த்தியான சைட் பேனல்களை பெற்றுள்ளது.

முகப்பு விளக்கின் அருகில் இரு புறங்களிலும் காற்று பயணிக்கும் வகையிலான ஏர் டேக் , பக்கவாட்டில் என்ஜினை முழுதாக கவர் செய்யப்பட்ட ஃபேரிங் பாகங்களை கொண்டு முழுதான ஃபேரிங் செய்யப்பட்டு நேர்த்தியாக வெள்ளை வண்ணத்தில் காட்சியாளிக்கின்றது. பின்பக்க தோற்றத்தில் எவ்வித மாறுதல்களும் இல்லை. இது அதிகார்வப்பூர்வமான மாற்றம் இல்லை டீலர்கள் வழியாக மாறுதல் செய்யப்பட்டுள்ளது.

TVS-Apache-Sports-Custom-side

TVS-Apache-Sports-Custom-fr TVS-Apache-Sports-Custom-rear

படம் ; http://permanatriaz.com/