அம்பாசிடர் ஹேட்ச்பேக் கார் விரைவில்

0
அரசியல் தலைவர்கள் முதல் உள்ளுர் தலைவர்கள் வரை ஆட்சி செய்து வரும் அம்பாசிடர் கார் 2014 ஆம் வருடத்தில் ஹேட்ச்பேக் காராக வெளிவரலாம் என செய்திகள்  வெளிவந்துள்ளன.

ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் 1958 முதல் தொடர்ந்து பல மாறுதல்களுடன் விற்பனையில் உள்ள காராகும். இன்னும் சில மாதங்களில் பிஎஸ் 4 டீசல் வெளிவரவுள்ளது. ஹிந்துஸ்தான் ஆர்&டி தற்பொழுது அம்பாசிடர் காரினை அடிப்பையாக கொண்டு ஹேட்ச்பேக் உருவாக்குவதில் தீவரமாக செயல் பட்டு வருகின்றது.

அம்பாசிடர்

புதிய பொலிவுடன் நவீன வசதிகளுடன் வெளிவரலாம். மேலும் இந்த ஹேட்ச்பேக் அம்பாசிடர் பெயரில் அல்லது வேறு பெயரில் வெளிவரலாம். மேற்கு வங்கத்தில் உள்ள உத்தர்பரா ஆலையை ஹேட்ச்பேக் தயாரிக்கும் வகையில் மேம்படுத்தி வருகின்றது . ஆண்டுக்கு 25,000 வாகனங்கள் தயாரிக்கலாம். 

Google News