அவென்ஜர் 220 க்ரூஸ் vs அவென்ஜர் 220 ஸ்டீரிட் – ஒப்பீடு

0

பஜாஜ் அவென்ஜர் க்ரூஸர் பைக் மொத்தம் மூன்று விதமான வேரியண்டில் இரண்டு விதமான என்ஜின் ஆப்ஷனில் வந்துள்ளது. முந்தைய 220சிசி ஆப்ஷனில் ஸ்டீரிட் மற்றும் க்ரூஸ் பைக்குகள் வந்துள்ளன.

அவென்ஜர் 220 க்ரூஸ்

குறைவான விலை கொண்ட மாடலாக அவென்ஜர் ஸ்டீரிட் 150 மாடலும் கிடைக்கின்றது. அவென்ஜர் 220 ஸ்டீரிட் , அவென்ஜர் 220 க்ரூஸ் எது பெஸ்ட் சாய்ஸ் பார்க்கலாம்..

வித்தியாசங்கள்

ரைடிங் :

அவென்ஜர் 220 ஸ்டீரிட் பைக் நகருக்குள் ஓட்டுவதற்க்கான சிட்டி க்ரூஸர் ரைடர் பைக்காகும்.

அவென்ஜர் 220 க்ரூஸ் பைக் நெடுஞ்சாலைகளுக்கான ரைடராகும்.

கைப்படி

அவென்ஜர் 220 க்ரூஸ் பைக்கின் ஹேண்டில்பார் சற்று உயரமாகவும் நெடுஞ்சாலைகளுக்கு ஏற்ற விதத்தில் உள்ளது.

அவென்ஜர் 220 ஸ்டீரிட் பைக்கின் ஹேண்டில்பார் சற்று உயரம் குறைவாகவும் மற்றும் பிளாட்டாக  இருக்கும்.

bajaj avenger 220 cruiser
அவென்ஜர் 220 க்ரூஸ்

அலாய் வீல் 

அவென்ஜர் 220 க்ரூஸ் பைக் முந்தைய கிளாசிக வயர் ஸ்போக் வீலை தொடர்ந்து பெற்றுள்ளது.

அவன்ஞ்சர் 220 ஸ்டீரீட் பைக்கில் புதிய 12 ஸ்போக் அலாய் வீல் முன்புறத்தில் மற்றும் பின்புறத்தில் 9 ஸ்போக் அலாய் வீலை பெற்றுள்ளது.

பிளாக்

அலாய் வீல் , புகைப்போக்கி , என்ஜின் , ஃபோர்க்கு கவர் போன்றவை கருப்பு நிறத்தினை 220 ஸ்டீரிட் பைக்கில் பெற்றுள்ளது.

வழக்கம்போல அலாய் வீல் , புகைப்போக்கி , என்ஜின் போன்றவை குரோம் பூச்சிலே உள்ளது.

கிராப் ரெயில்

முந்தைய கிராப் ரெயில் மற்றும் பில்லன் பேக் ரெஸ்ட்டினை 220 க்ரூஸ் பெற்றுள்ளது.

புதிய பேட் ரெஸ்ட் இல்லா கிராப் ரெயிலை 220 ஸ்டீரிட் பெற்றுள்ளது.

வண்ணம்

அவென்ஜர் 220 க்ரூஸ் பைக் மேட் கருப்பு வண்ணத்தில் கிடைக்கும்.

அவென்ஜர் 220 ஸ்டீரிட் பைக் டிவைன் கருப்பு வண்ணத்தில் கிடைக்கும்.

அவென்ஜர் 220 ஸ்டீரிட்

ஒற்றுமைகள் என்ன 

என்ஜின்

ஸ்டீரிட் மற்றும் க்ரூஸ் பைக்கில் முந்தைய 220 சிசி என்ஜினே பெற்றுள்ளது.

முகப்பு விளக்கு

இரண்டு க்ரூசரிலுமே HUE முகப்பு விளக்குகளை பெற்றுள்ளது.

டிஜிட்டல் கன்சோல்

புதிய அனலாக் டிஜிட்டர் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டரினை பெற்றுள்ளது.

பஜாஜ் அவென்ஜர் விலை

அவென்ஜர் 220 க்ரூஸ்  ரூ.84,000
அவென்ஜர் 220 ஸ்டீரிட் ரூ.84,000

Bajaj Avenger 220 Cruise vs avenger Street 220