ரூ.150 கோடியில் சென்னை அருகே உள்ள ஒரகடத்தில் ஐசர் நிறுவனத்தை தலைமை நிறுவனமாக கொண்டு செயல்படும் ராயல் என்பீல்டு அமைத்துள்ளது. இந்த ஆலையின் உற்பத்தி திறன் ஆண்டிற்க்கு 2.50 லட்சம் பைக் ஆகும்.
இந்த ஆலையில் பெயின்டிங் முறை ஆட்டோமேட்டிக்காக அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 600 மோட்டார் சைக்கிள்களை உருவாக்க முடியும். 50 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆலை அமைந்துள்ளது. தற்பொழுது டெஸர்ட் ஸ்டோர்ம் பைக் உற்பத்தி தொடங்கியுள்ளது. விரைவில் தன்டர்பேர்டு 350 மற்றும் 500 உற்பத்தி தொடங்கும்.
சித்தார்த் லால் MD & CEO (Eicher Motors Ltd) கூறுகையில்..
ராயல் என்ஃபீல்டு வரலாற்றில் இந்த ஆலையின் தொடக்கம் புதிய மைல்கல்லாக அமையும். கடந்த இரண்டு ஆண்டுகளில் 50 சதவீதத்திற்க்கு அதிகமான வளர்ச்சினை கண்டுள்ளது. தற்பொழுது முன்பதிவு செய்தவர்கள் 6 முதல் 8 மாதம் வரை காத்திருக்க வேண்டிய உள்ள நிலை இனி வெகுவாக குறையும்.
வரும் காலங்களில் புதிய மாடல்கள் விற்பனைக்கு வரும். மேலும் பல புதிய டீலர்களை திறக்க திட்டமிட்டுள்ளோம். 2014க்குள் ஆண்டிற்க்கு 2.50 லட்சம் பைக் என்ற முழுமையான உற்பத்தியை எட்டும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.