உலகின் மிக நீளமான சைக்கிளை வடிவமைத்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இணைந்து சாதனை புடைத்துள்ளனர். டச்சின் மிஜி வேன் மேர்ஸ் வெர்க்புலோக் என்கின்ற சைக்கிளிங் அமைப்பு தான் வடிவமைத்துள்ளது.
117 அடி 5 இஞ்ச் நீளம் கொண்டுள்ள உலகின் மிக நீளமான சைக்கிளில் இரண்டு சங்கரங்களில் மட்டுமே இயங்குகின்றது. இரண்டு நபர்களால் இயக்கும் வகையில் மிக இலகுவான எடையில் உறுதியான பாகங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சைக்கிளின் முன்புறத்தில் கைப்பிடியை கட்டுப்படுத்த ஒருவரும் , பின்புறத்தில் பெடல் செய்ய ஒருவரும் இருந்தால் போதுமானதாகும்.
இந்த சைக்கிள் மிக நீளமானதாக இருந்தாலும் பெடல் செய்வதற்க்கு மிக எளிமையாகவும் , சைக்கிளின் நிலைப்பு தன்மையிலும் எவ்வித பாதிப்பும் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube https://www.youtube.com/watch?v=k-NpZQIQ6pE]
2016 கின்னஸ் சாதனை புத்தகத்தில் உலகின் மிக நீளமான சைக்கிளாக இடம் பெற்றுள்ளது.