உலக சாதனையை ட்ரிஃப்டிங்கில் படைத்த டொயோட்டா 86

0

சுமார் 6 மணி நேரம் , 165.04 கீமி தொடர்ந்து ட்ரிஃப்டிங் என உலகின் மிக நீளமான டிரிஃப்டிங் சாதனையை தென் ஆப்பிரிக்க மோட்டார் பத்திரிகையாளர் ஜெஸ்ஸி ஆடம்ஸ் படைத்துள்ளார். கின்னஸ் புத்தகத்தில் இவருடைய டிரிஃப்டிங் சாதனையை இடம்பெற உள்ளது.

toyota 86 drift world record

Google News

டொயோட்டா 86

தென் ஆப்பிரிக்கா நாட்டில் அமைந்துள்ள ப்ரிட்டோரியா நகரில் உள்ள  ஜெரோடெக் சோதனை டிராக்கில் உள்ள வட்ட வடிவ சறுக்கலில் ஜெஸ்ஸி ஆடம்ஸ் எனும் தென்ஆப்பிரிகா மோட்டார் பத்திரிக்கையாளர் டொயோட்டா 86 கார் வாயிலாக தொடர்ந்து 5 மணி நேரம் 46 நிமிடங்கள் டிரிஃப்டிங் செய்து 1000 முறை லேப்பை சுற்றி வந்துள்ளார். இதனை நேரடியாக கின்னஸ் மையம் பதிவு செய்துள்ள நிலையில் மொத்தமாக மேற்கொள்ளப்பட்ட 1000 லேப் சுற்றுகளில் 48 லேப்களை நிராகரித்து 952 லேப்களை கின்னஸ் ஏற்றுக் கொண்டுள்ளது. சராசரியாக இந்த காரின் வேகம் மணிக்கு 29 கிமீ ஆக இருந்தது.

toyota 86 south africa drift world record

கூடுதலான பெட்ரோல் டேங்க் வசதி மற்றும் டயர் இருப்பு போன்றவற்றை பராமரிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் இரண்டு விபாக்ஸ் ஜிபிஎஸ் டேட்டா பெறும் கருவிகளை டொயோட்டா பொருத்தியிருந்தது. இந்த சாதனையை நேரடியாக பதிவு கின்னஸ் அமைப்பு செய்துள்ளது.

இதற்கு முன்பாக 2014-ல் டொயோட்டா 86 காரில் அதிகபட்சமாக 20.914 கிமீ டிரிஃப்டிங்கை ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஹெரால்டு முல்லர் ட்ரிஃப்டர் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடதக்கதாகும்.

toyota 86 south africa drift