இந்தியாவிலே உருவாக்கப்பட்டுள்ள டிசி அவந்தி பிரபலமான கஸ்டமைஸ் நிறுவனமான டிசியால் தயாரிக்கப்பட்டுள்ளது. டிசி அவந்தி காரின் விலை ரூ.35 லட்சம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்பதிவு தொடங்கி உள்ள நிலையில் முதல் பேஸ் தயாரிப்பில் உள்ள 500 கார்களுக்கான முன்பதிவு முடிவடைந்துள்ளதாம். டிசி அவந்தி கார் மொத்தம் 4000 கார்கள் மட்டுமே டிசி தயாரிக்கும் என்பது குறிப்பிடதக்கதாகும்.
என்ஜின்
டிசி அவந்தி ஸ்போர்ட்ஸ் காரில் ஃபோர்டு 2.0 லிட்டர் ட்ர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 250பிஃச்பி மற்றும் டார்க் 366என்எம் ஆகும். 6 வேக மேனுவல் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது. அவந்தி மணிக்கு 250 கிமீ வேகம் செல்லவல்லது.
பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு
பாஸ் செக்ஷன் பேஸ் ஃபிரேம் சேஸி கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பாடி கார்பன் ஃபைபரால் கட்டமைத்துள்ளனர், 2 நபர்கள் மட்டுமே பயணிக்க முடியும். என்ஜின் இருக்கை மற்றும் பின்புற சக்கரங்களுக்கு இடையில் பொருத்தப்பட்டுள்ளது இதனால் இது மிட்-என்ஜின் ஸ்போர்ட்ஸ் கார் எனப்படுகின்றது.
டபூள் விஸ்போன் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. முன் மற்றும் பின் பகுதிகளில் 330மிமீ வென்டிலேட் டிஸ்க் பிரேக் பயன்படுத்தப்பட்டுள்ளது.
டிசி அவந்தி காரின் நீளம் 4623மிமீ , அகலம் 1967மிமீ , மற்றும் உயரம் 1213மிமீ ஆகும். இதன் வீல் பேஸ் 2700மிமீ. இந்திய சாலைகளுக்கு ஏற்ப கிரவுண்ட் கிளியரன்ஸ் 170மிமீ கொண்டுள்ளது. அவந்தி காரின் எடை 1562கிலோ ஆகும்.
காற்றுபைகள் மற்றும் ஏபிஎஸ் போன்ற பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது. பல நவீன வசதிகளான தொடுதிரை தகவமைப்பு, டிஜிட்டர் இன்ஸ்ட்ரூமென்ட் பெனல் போன்றவை ஆகும். 10 விதமாண வண்ணங்களில் கிடைக்கும்.
விலை குறைந்த ஸ்போர்ட்ஸ் கார்
உலகிலே விலை குறைந்த ஸ்போர்ட்ஸ் காராக டிசி அவந்தி விளங்கும். இதனால் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.
மேக் இன் இந்தியா காராக டிசி அவந்தி ஸ்போர்ட்ஸ் கார் வலம் வரவுள்ளது.