என்ஜின் ஆயில் கொஞ்சம் கவனிங்க

வாகனங்களின் பராமரிப்பில் என்ஜின் ஆயில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. என்ஜின் ஆயில் பராமரிப்பு சரிவர செய்தால் என்ஜின் சிறப்பாக  நீண்ட ஆயுளை தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

engine oil
என்ஜின் ஆயில் சரியான கால இடைவெளியில் மாற்ற தவறினால் பல்வேறு விதமான என்ஜின் கோளாறுகள் ஏற்படும். குறிப்பாக என்ஜின் ஆயுள் குறையும். என்ஜின் ஆயில் அதிகப்படியான என்ஜின் பாகங்களின் தேய்மானத்தை குறைக்கின்றது.

எவ்வாறு சரியான கால இடைவெளியில் ஆயில் மாற்றுவது..

  • உங்கள் வாகனத்தின் தயாரிப்பாளரே எவ்வளவு தூரம் பயணித்தால் ஆயில் மாற்ற வேண்டும் என விளக்க கையேடுகளை கொடுப்பார்கள். அவர்கள் கொடுத்த கால அளவு பயணத்தின் தூரம் போன்றவற்றை கொண்டு மாற்றுங்கள்.
  • பல மாதங்கள் கடந்தும் தயாரிப்பாளர் கொடுத்த தூரத்தை உங்கள் வாகனம் கடக்கவில்லை என்றாலும்  8 மாதம் அல்லது அதற்க்கு மேற்ப்பட்டு இருந்தால் ஆயில்  மாற்றிவிடுங்கள்.
  • வாகனம் இயங்காத பொழுது என்ஜின் ஆயில் அடிப்பகுதியில் உள்ள சம்பில் தங்கியிருக்கும். அந்த காலகட்டத்தில் இயக்கம் இல்லாத பொழுது குளிர்ந்த நிலையில் பல விதமான மாற்றங்கள் ஏற்பட்டு ஆயில் தன்மை மாறும். இதனால் சில தேவையற்ற தொல்லைகள் ஏற்படலாம்.
  • தயாரிப்பாளர் பரிந்துரைத்த ஆயிலை மட்டுமே பயன்படுத்துங்கள்..

மேலும் தொடர்ந்து படிக்க  ஆட்டோமொபைல் டிப்ஸ்