என்ஜின் ஆயில் தரமானதா ? அறிவது எவ்வாறு ?

0

உங்கள் வாகனத்திற்க்கு பயன்படுத்தும் என்ஜின் ஆயில் தரமானதா ? தரமற்றதா ? தரமான என்ஜின் ஆயில் என்றால் அதன் நன்மைகள் என்ன ? தரமற்ற என்ஜின் ஆயில் என்றால் தீமைகள் என்ன ? இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

என்ஜின் ஆயில் பராமரிப்பு

கார் , பைக் , பஸ் மற்றும் டிரக் என எந்த வாகனமாக இருந்தாலும் என்ஜின் ஆயில் என்பது அதற்க்கான ரத்தம் போன்றதாகும். எனவே தரமான என்ஜின் ஆயிலை பயன்படுத்தி வாகனத்தின் ஆயுளை அதிகரிக்க செய்யுங்கள்.

1. கால இடைவேளை

உங்கள் வாகனத்தின் தயாரிப்பாளர் பரிந்துரைத்த சரியான கால இடை வெளியில் என்ஜின் ஆயில் சர்விஸை கண்டிப்பாக செய்ய வேண்டியது அவசியம் இல்லையென்றால் மைலேஜ் குறைவு மற்றும் என்ஜின் ஆயுள் பாதிக்கும்.

2. சிறந்த ஆயில்

வாகனத்தின் தயாரிப்பாளர் கையேட்டில் குறிப்பிட்டுள்ள கிரேடு ஆயிலை பயன்படுத்ததுங்கள் . விலை குறைவாக இருக்கின்றது என்பதற்க்காக தரமற்ற ஆயில் அல்லது தரமில்லாத இடத்தில் சர்வீஸ் செய்யாதீர்கள்.

3. எதனால் ஆயில் மாற்றம் தேவை

எதனால் என்ஜினுக்கான ஆயில் மாற்றுகிறோம் ? என்ற கேள்விக்கு விடை ஆயில் தொடர்ந்து என்ஜின் பாகங்களை குளிர்விப்பதனால் அதன் நிலைப்புதன்மை , உய்வுதன்மை போன்றவை காலப்போக்கில் சில மாறுதல்கள் பெற்று முழுமையாக என்ஜின் பாகங்கள் குளிர்விக்காது.

என்ஜின் ஆயில் பராமரிப்பு
முறையான மற்றும் முறையற்ற பராமரிப்பு

இதன் காரணமாக வாகனத்தின் மைலேஜ் , என்ஜின் பாகங்களில் ஏற்படும் அதிக வெப்பத்தால் உங்கள் என்ஜின் பாதிப்படைந்நு செயல்திறன் குன்றும்.

4. என்ஜின் ஆயுள்

முறையான பாரமரிப்புடன் கூடிய தரமான ஆயில் பயன்படுத்தினால் என்ஜினுக்கு ஆயுசு 100 எனலாம். சரியான காலஇடைவெளி விட்டு சரியான மைலேஜில் ஆயிலை மாற்றுவது மிக அவசியமாகின்றது.

5. எங்கே மாற்றலாம்

தரமான ஆயில் எங்கே கிடைக்கும் என்று தேடுவதனை விட தயாரிப்பாளரின் பரிந்துரைத்த ஆயிலை தேர்ந்தேடுப்பது மிக அவசியம். முடிந்தவரை அங்கீகரிக்கப்பட சேவை மையங்களில் ஆயில் சர்வீஸ் செய்யுங்கள்.

6. ஏன் சர்வீஸ் மையம்

வெளியிடங்களில் மிக குறைவான விலையில் மாற்றி தருகிறார்களே ? அப்படி இருக்க ஏன் சர்வீஸ் மையம் .. ஒரு என்ஜினை உருவாக்கி லட்சக்கணக்கான கிலோமீட்டர்கள் சோதனை செய்து குறிப்பிட்ட கால இடைவெளியை வகுத்து தரமான ஆயில் எதுவென்று தேர்வு செய்து தருவதனால் சர்வீஸ் மையத்தை தேர்ந்தேடுப்பதே நல்லதாகும்.

என்ஜின் , எஞ்சின்

7 . முறையாக பராமரியுங்கள்

எப்பொழுது சரியான கால இடைவெளியில் முறையாக பராமரித்தால் என்ஜினுக்கும் ஆயுள் நமக்கும் சேமிப்பு……….

7 things Know about Good Engine oil

மேலும் ஒரு சின்ன ஆட்டோ வினாடி வினா உங்கள் பதிலை தாருங்கள் விடை சரியா செக் பன்னுங்க…..

[wp_quiz id=”13447″]