சர்வதேச அளவில் சிறந்து விளங்குகின்ற எஞ்சின்களுக்கு விருது வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டின் சர்வதேச எஞ்சினாக ஃபெராரி நிறுவனத்தின் 3.9 லிட்டர் வி8 ட்வீன் டர்போ எஞ்சின் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச எஞ்சின் விருதுகள் – 2017
சர்வதேச என்ஜின் விருதுகள் 2017 ஆம் ஆண்டில் 31 நாடுகளை சேர்ந்த 58 ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர்கள் நடுவர்காளக செயல்பட்டு சிறந்த எஞ்சின் உள்பட புதிய எஞ்சின், எலக்ட்ரிக் பவர்ட்ரெயின் உள்பட பல்வேறு லிட்டர் பிரிவுகள் வாயிலாக எஞ்சின்களை தேர்வு செய்துள்ளனர்.
6 ஆண்டுகளாக தொடர்ந்து 1.0 லிட்டருக்கு குறைவான பிரிவில் ஃபோர்டு நிறுவனத்தின் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் சிறந்த எஞ்சினாக விளங்குகின்றது. மேலும் சில ஆண்டுகள் என்ஜின் விருதுகளையும் வென்றுள்ளது.
இரண்டாவது ஆண்டாக இந்த வருடத்தின் சிறந்த சர்வதேச எஞ்சினாக ஃபெராரி 488 GTB காரில் இடம்பெற்றுள்ள 3.9 லிட்டர் வி8 ட்வீன் டர்போ எஞ்சின் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் மொத்தம் உள்ள 13 பிரிவுகளில் 3 பிரிவுகளில் இந்த என்ஜின் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர 5 லிட்டருக்கு மேற்பட்ட பிரிவில் ஃபெராரி நிறுவனத்தின் 6.3லிட்டர் எஞ்சின் இடம்பெற்றுள்ளது.
மின்சாரம் சார்ந்த எஞ்சின் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பிரிவுகளில் டெஸ்லா எலக்ட்ரிக் பவர்ட்ரெயின் பெற்றுள்ளது.
புதிய எஞ்சினாக ஹோண்டா நிறுவனத்தின் 3.5 லிட்டர் பெட்ரோல் எலக்ட்ரிக் ஹைபிரிட் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.
முழுமையான பட்டியலை கீழே உள்ள அட்டவனையில் காணலாம்..!
எஞ்சின் பிரிவு | வெற்றி பெற்ற பொறிகள் |
புதிய எஞ்சின் | ஹோண்டா 3.5 லி பெட்ரோல் எலக்ட்ரிக் ஹைபிரிட் |
சுற்றுச்சூழல் எஞ்சின் | டெஸ்லா எலக்ட்ரிக் பவர்ட்ரெயின் |
மின்சார எஞ்சின் | டெஸ்லா எலக்ட்ரிக் பவர்ட்ரெயின் |
செயல்திறன் எஞ்சின் | ஃபெராரி 3.9 லிட்டர் ட்வீன் டர்போ V8 |
1.0லிட்டருக்கு குறைவான எஞ்சின் | ஃபோர்டு 998cc டர்போ (Automobiletamilan) |
1.0 லிட்டர் to 1.4 லிட்டர் | PSA பீஜோ சிட்ரோன் 1.2 லிட்டர் டர்போ |
1.4 லிட்டர் to 1.8 லிட்டர் | BMW 1.5 லி பெட்ரோல் எலக்ட்ரிக் ஹைபிரிட் |
1.8 லிட்டர் to 2.0 லிட்டர் | போர்ஷே 2.0 லிட்டர் டர்போ |
2.0 லிட்டர் to 2.5 லிட்டர் | ஆடி 2.5 லிட்டர் டர்போ |
2.5 லிட்டர் to 3.0 லிட்டர் | போர்ஷே 3.0 லிட்டர் டர்போ |
3.0 லிட்டர் to 4.0 லிட்டர் | ஃபெராரி 3.9 லிட்டர் ட்வீன் டர்போ V8 |
4.0 லிட்டருக்கு மேல் | ஃபெராரி 6.3 லிட்டர் V12 |
சர்வதேச எஞ்சின் 2017 | ஃபெராரி 3.9 லிட்டர் ட்வீன் டர்போ V8 |