ஆட்டோமொபைல் எஞ்சின் இயங்குவது எப்படி தொடரின் பகுதி ஐந்தில் என்ஜின் பாகங்கள் மற்றும் அதன் பயன்கள் பற்றி கான்போம்
என்ஜின்யில் நிறைய பாகங்கள் இருந்தாலும் மிக முக்கியாமான 12 பாகங்களை பற்றி கான்போம்.
HOW TO ENGINE WORK IN TAMIL
1. சிலின்டர் ப்ளாக்(cylinder block)
சிலின்டர் ப்ளாக் எனப்படுவது என்ஜின்யின் அனைத்து பாகங்களை தாங்கும் அமைப்பாகும். சிலின்டர் ப்ளாக்யில் என்ஜின் வெப்பத்தை தனிக்க cooling finsகளும் இருக்கும்.
2. சிலின்டர்(cylinder)
சிலின்டர் எனப்படுவது பிஸ்டன் மேலும் கீலும் சென்று வரும் பகுதியாகும். இந்த பகுதியில் தான் எரிதல்(combustion) நடக்கும். மிக அதிகமான வெப்பத்தை தாங்கும் வகையில் உருவாக்கப்படும்.
3. பிஸ்டன் (piston)
சிலின்டர் உட்ப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் பிஸ்டன் மேலும் கீழும் சென்று வரும் வகையில் அமைக்கப்படும்.பிஸ்டனயில் பிஸ்டன் ரிங் பொருத்தப்பட்டிருக்கும். பிஸ்டன் ரிங் கேஸ் மற்றும் ஆயில் கசிவை தடுக்கும்
4. எரிதல் கலன் (combustion chamber)
எரிதல் கலன் மிக அதிகமான வெப்பம் மற்றும் அழுத்தம் தாங்கும் வகையில் உருவாக்கப்படும்.
5.இன்லெட்&அவ்ட்லெட் (inlet&outlet manifold)
இன்லெட்&அவ்ட்லெட் குழாய் வடிவில் இருக்கும். இன்லெட் காற்றை மற்றும் எரிபொருளை எரிதல் கலன்க்கு எடுக்க பயன்படும். அவ்ட்லெட் எரிந்த எரிபொருளை வெளியேற்ற பயன்படும்.
6.வால்வ்(valve)
வால்வ் இன்லெட்&அவ்ட்லெட் என இரண்டுக்கும் இருக்கும். இன்லெட் வால்வ் காற்றை மற்றும் எரிபொருளை எரிதல் கலன்க்கு எடுக்க திறக்கும். அவ்ட்லெட் வால்வ் எரிந்த எரிபொருளை வெளியேற்ற திறக்கும்.
7.ஸ்பார்க் ப்ளாக்(spark plug)
சிலின்டர் மேல்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும். ஸ்பார்க் ப்ளாக்கில் தீ பொறி உன்டாகி எரிபொருள் எரிந்து ஆற்றல் கிடைக்கும்.
8.இன்ஜெக்டர்(injector)
சிலின்டர் மேல்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும். injectorயில் தெளிக்கும் பொழுது எரிபொருள் எரிந்து என்ஜின்க்கு இயக்க ஆற்றலை கிடைக்கும்.
9.கனக்டீங் ராட்(connecting rod)
கனக்டீங் ராட் பிஸ்டன்யுடன்( small end ) மேல்பகுதி பொருத்தப்பட்டிருக்கும். கீழ்பகுதி க்ராங்க் ஸாப்ட்யுடன்(Big end) பொருத்தப்பட்டிருக்கும்.
10. க்ராங்க் ஸாப்ட்(crank shaft)
பிஸ்டன்யில் இருந்து வரும் ஆற்றலை(reciprocating motionமேலும் கீழும்) க்ராங்க் ஸாப்ட் rotary motion (வட்ட) மாற்றும்
11.கேம் ஸாப்ட்(cam shaft)
சிலின்டர் மேல்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும்.இன்லெட்&அவ்ட்லெட் வால்வை இயக்க பயன்படும். கேம்ஸ் வால்வை திறக்க மூட பயன்படும்.
12.ப்ளைய் வீல்(flywheeel)
ப்ளைய் வீல் க்ராங்க் ஸாப்ட் மூலம் கிடைக்கும் ஆற்றலை சீர்படுத்த பயன்படும்.