என்ஜின் இயங்குவது எப்படி பகுதி-2

ஆட்டோமொபைல்  தொழில்நுட்ப தொடரான என்ஜின் இயங்குவது எப்படி தொடரில் இரண்டாவது பகுதியில்  எரிதல் அடிப்படையில் என்ஜின்(Based on combustion) என்றால் என்ன என்பது பற்றி அறிந்து கொள்ளலாம்.

எஞ்சின் இயங்கும் விதம்

Internal Combustion Engine (IC Engine):

உலக அளவில் உட்ப்புற எரிதல் என்ஜின்தான் அதிகயளவில் பயன்படுத்தப்படுகிறது. அனைத்து ஆட்டோமொபைல் வாகனங்களுக்கு IC Engine பயன்படுத்தப்படுகிறது. என்ஜின் உட்ப்புறமாக எரிபொருளை எரித்து ஆற்றலை தருகிறது. அந்த ஆற்றலை கொண்டு வாகனம் இயங்குகிறது.
எ.கா:  கார், பஸ்,லாரி, பைக்….

IC engine


External Combustion Engine (EC Engine):

வெளிப்புற  என்ஜின் அதிகயளவில்  பயன்பாட்டில் இல்லை. ஸ்டீம் என்ஜின் வெளிப்புற  என்ஜின் ஆகும். வெளிப்புறமாக உற்பத்தி செய்யப்படும் ஆற்றலை கொன்டு என்ஜின் இயங்கும்.

எ.கா: ஸ்டீம் ரயில் என்ஜின், ஸ்டீம் ஜென்ரேட்டர்

EC Engine
குறிப்பு ; 2012 ஆம் ஆண்டு நமது தளத்தில் வெளியான  என்ஜின் இயங்குவது எப்படி ? பகிர்வின் மேம்பட்ட பகிர்வாகும்.

Recommended For You