எஸ்யூவி கார்களின் சந்தை நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றது. இந்நிலையில் காம்பெக்ட் எஸ்யூவி கார்களின் வரவும் அதிகரித்து வருகின்றது. 2014 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரப்போகும் எஸ்யூவி கார்களை பற்றி பார்ப்போம்.

மாருதி எக்ஸ்ஏ ஆல்ஃபா

2014 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படும் எக்ஸ்ஏ ஆல்ஃபா புதுவிதமான வடிவமைப்பில் இந்திய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் மாருதி சுசூகி வடிவமைத்து வருகின்றது.

பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் விற்பனைக்கு வரவுள்ளது. பெட்ரோல் காரில் 1.2 லிட்டர் கே சீரிஸ் என்ஜினும் டீசல் காரில் 1.3 லிட்டர் மல்டிஜெட் ஃபியட் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம்.

எக்ஸ்ஏ ஆல்ஃபா காரின் விலை ரூ.7.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை இருக்கலாம்.

மஹிந்திரா ஸ்கார்பியோ 2014

மேம்படுத்தப்பட்ட ஸ்கார்பியோ கார் தற்பொழுது சோதனையில் உள்ளது. 11 வருடங்களாக இந்திய எஸ்யூவி சந்தையினை தன் வசம் வைத்துள்ள ஸ்கார்பியோ காரின் மேம்படுத்தப்பட்ட மாடலில் முகப்பு மற்றும் பின்புறத்தில் சில மாற்றங்களை பெற்றிருக்கும். மேலும் என்ஜினில் மாற்றங்கள் இருக்காது என தெரிகின்றது.

2014 ஆம் வருடத்தின் மத்தியில் வெளிவரவுள்ள ஸ்கார்பியோ 8 முதல் 12 லட்சம் விலையில் வெளிவரலாம்.

ஹோண்டா வெசல்

ஹோண்டா நிறுவனத்தின் காம்பெக்ட் எஸ்யூவியான வெசல் ஜப்பானில் விற்பனைக்கு வந்துள்ளது.  இதே எஸ்யூவி கார் இந்தியாவிலும் விற்பனைக்கு வரலாம என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காரானது ஈக்கோஸ்போர்ட் , டஸ்டர் , டெரோனோ போன்ற கார்களுக்கு சவாலினை தரலாம் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹோண்டா எஸ்யூவி

வெசல் எஸ்யூவி காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் வெளிவரலாம். 2014 ஆம் ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வரும். வெசல் காரின் விலை 8-12 லட்சம் விலையில் இருக்கலாம்.

மஹிந்திரா மினி எஸ்யூவி

மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி500 காரினை அடிப்படையாக கொண்ட மினிஎஸ்யூவி காரினை சோதனை செய்து வருகின்றது. இந்த எஸ்யூவி ஈக்கோஸ்போர்ட் காருக்கு நேரடியான போட்டியினை ஏற்ப்படுத்தும் வகையில் விற்பனைக்கு வரும்.

இந்த காரானது 2014 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரலாம். இந்த காரின் விலை ரூ.6 முதல் 10 லட்சம் வரை இருக்கலாம்.

ஹூன்டாய் சான்டா ஃபீ  2014

ஹூன்டாய் நிறுவனத்தின் சான்டா ஃபீ எஸ்யூவி காரின் மேம்படுத்தப்பட்ட சான்டா ஃபீ மிகவும் நேர்த்தியான வடிவத்தினை கொண்டதாக சான்டா ஃபீ வலம் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2014 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரவுள்ள சான்டா ஃபீ 2.2 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். மேலும் ஆல் வீல் டிரைவினை கொண்டிருக்கும்.

சான்டா ஃபீ எஸ்யூவி காரின் விலை ரூ. 23 லட்சம் முதல் 25 லட்சம் வரை இருக்கலாம்.

மேலும் பல காத்திருக்கின்றன………………………………………………………தொடரும்