Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

இந்தியாவில் 30 வருடம் இங்கிலாந்தில் 28 வருடம் : ஐஎன்எஸ் விராட்

by automobiletamilan
March 6, 2017
in Wired, செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

உலகின் மிகவும் பழமையான போர்கப்பலும் இந்தியாவின் வரலாற்றை பறைசாற்றும் ஐஎன்எஸ் விராட் விமானந்தாங்கி கப்பல் இன்றுடன் தனது சேவையிலிருந்து பிரியா விடைபெறுகின்றது. 1944 ஆம் ஆண்டு தொடங்கி ஐஎன்எஸ் விராட் வரலாறு 2017 ஆம் ஆண்டு நிறைவடைகின்றது.

ins viraat ship1

 

ஹெர்மிஸ் முதல் ஐஎன்எஸ் விராட் வரை

  • 1944 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் ஹெச்.எம்.எஸ்.ஹெர்மிஸ் என பெயரிடப்பட்டு கட்டுமானத்தை தொடங்கிய ஒரே வருடத்தில் பாதியிலே நிறுத்தப்பட்டது.
  • மீண்டும் 1952 ஆம் ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு 16 பிப்பரவரி 1953 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
  • ஆனால் முழுமையான கட்டுமானம் 1958 ஆம் ஆண்டு நிறைவு செய்யப்பட்டு 19 நவம்பர் 1959 அன்று ஹெச்.எம்.எஸ்.ஹெர்மிஸ் என்ற பெயரில் இங்கிலாந்து விமான படையில் சேர்க்கப்பட்டது.

ஹெச்.எம்.எஸ்.ஹெர்மிஸ் கப்பல் படம்

HMS Hermes

  • 1982 ஆம் ஆண்டு இங்கிலாந்து ராணுவத்தால் விடை கொடுக்க முடிவு செய்யப்பட்டு 1984 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் விடைபெற்றது.
  • 1987 ஆம் இந்தியா இந்த விமானதாங்கி போர்க்கப்பலை வாங்கி 12 மே 1987 அன்று முறைப்படி ஐ.என்.எஸ். விராட் என்ற பெயரில் இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட்டது.
  • 28,700 டன் எடைகொண்ட விராட் கப்பலின் நீளம் 226.5 மீட்டர், அகலம் 48.78 மீட்டர். மணிக்கு 52 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறனை பெற்றதாகும்.
  • இந்தியாவில் பயன்பாட்டிற்கு வந்த பிறகு முதன்முறையாக 1989 ஆம் ஆண்டு இலங்கைக்கு, இந்திய அமைதிப்படை சென்ற பொழுது முக்கிய பங்காற்றியது.
  • மேலும் 2001-ல் இந்திய நாடாளுமன்றத் தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட அசாதரன நிலையின் பொழுது விராட் விமானந்தாங்கி கப்பல் முக்கிய பங்காற்றியது.
  • 2016-ல் ஜூலை 23ந்தேதி மும்பையில் இருந்து கொச்சிக்கு பயணம் மேற்கொண்ட விராட் கப்பலின் கடைசி பயணமாகும்.
  • அதன் பின்னர் கொச்சியில் இருந்து மும்பைக்கு எடுத்து வரப்பட்டது.
  • ஐ.என்.ஐ விக்ராந்த் கப்பலை தொடர்ந்து விடைபெறுகின்ற ஐ.என்.எஸ் விராட் கப்பல் இந்திய ராணுவத்தின் வலிமையை பறைசாற்றி வந்தது.
  • தற்பொழுது பணியில்  ரஷ்யாவிடமிருந்து வாங்கிய விமானந்தாங்கி கப்பல் ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா உள்ளது.
  •  2,250 நாட்கள் கடலில் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.என்.எஸ். விராட் உலகின் அளவில் 27 முறை சுற்றி வந்துள்ளது (10.94 லட்சம் கி.மீ.).
  • இன்று அதாவது மார்ச் 6, 2017-ல்  மாலை 6.45 மணிக்கு விராட் கப்பல் விடை பெறுகின்றது.

ins viraat

விராட் என்னவாகும் இனி ?

ஆந்திர மாநில அரசு விராட் கப்பலை வாங்கி,  விசாகப்பட்டினம் அருகில் போர்க்கப்பல் அருங்காட்சியகமாகவும், சொகுசு விடுதியாகவும் மாற்றத் திட்டமிட்டுள்ளது. இதற்கு ரூ.1000 கோடி வரை செலவு பிடிக்கும் என கணக்கிட்டுள்ளது.

இந்தியாவின் முதல் விமான தாங்கி விக்ராந்த் கப்பலை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் உடைத்து அதன் மெட்டல் பாகங்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட பஜாஜ் வி என்ற பிராண்டினை உருவாக்கி வி15 மற்றும் வி12 மோட்டார் சைக்கிள் மாடல்களை விற்பனை செய்து வருகின்றது. இந்த பைக்குகளில் இடம்பெற்றுள்ள பெட்ரோல் டேங்க் மட்டுமே விக்ராந்த் கப்பலின் மெட்டல் பாகமாகும்.

ins virrat

ஒருவேளை ஆந்திர அரசு இந்தக் கப்பலை வாங்கவில்லை எனில் ஏலம் விடப்பட்டு மெட்டல் பாகங்களுக்கு உடைக்கப்படும் என்பதனால் மீண்டும் இந்த மெட்டல் பாகங்களை பஜாஜ் வாங்க வாய்ப்புகள் உள்ளது.

 

Tags: கப்பல்
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Refresh
Go to mobile version