தானியங்கி முறையில் ஓட்டுனரில்லா டிராக்டர்கள் எதிர்கால உணவு உற்பத்தியில் மாற்றத்தை தரும் என ஆனந்த மஹிந்திரா தெரிவித்துள்ளார். உலகின் அதிக டிராக்டர்கள் தயாரிப்பதில் மஹிந்திரா இரண்டாவது இடத்தில் உள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற மஹிந்திரா அன்டு மஹிந்திரா 70வது பங்குதாரர்கள் வருடாந்திர கூட்டத்தில் பேசிய மஹிந்திரா தலைவர் ஆனந்த மஹிந்திரா பேசுகையில் ஓட்டுனரில்லா டிராக்டர்கள் உணவு உற்பத்தி எதிர்காலத்தில் மாற்றத்தை தரவல்லதாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த ஐந்து வருடங்களில் உலகின் பெரும்பாலான முன்னனி கார் நிறுவனங்கள் அனைத்தும் ஓட்டுனரில்லா தானியங்கி கார்களை விற்பனை செய்யும் நோக்கில் தீவரமான சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது. ஜான் டீரி டிராக்டர் நிறுவனத்துக்கு அடுத்தப்படியாக அதிகப்படியான டிராக்டர்களை உற்பத்தி செய்யும் மஹிந்திரா நிறுவனம் டிராக்டர் தயாரிப்பில் எண்ணற்ற புதிய நுட்பங்கள் மற்றும் ஆதாரங்களை கொண்டு செயல்பட்டு வருகின்றது.
வரும் காலத்தில் போட்டியாளர்களுடன் ஈடுகொடுக்கும் வகையிலும் புதிய நுட்பங்கள் மற்றும் ஓட்டுனரில்லா டிராக்டர் உருவாக்கவதிலும் ஆர்வமுடன் செயல்பட்டு வருகின்றோம் என மஹிந்திரா தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த 8 வருடங்களாக தொடர்ச்சியாக லாபத்தை அடைவதில் சிரமப்பட்டு வரும் மஹிந்திரா இருசக்கர வாகன பிரிவினை புதுப்பிக்கும் நோக்கில் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய எதிர்காலத்தில் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.