கடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள்

0
இன்றைய நவீன உலகில் சாலை விதிகளை இந்தியளவில் 90 சதவீதத்ற்க்கு அதிகமான சாரதிகளும் பாதசாரிகளும் சரியான முறையில் பயன்படுத்த தவறியே வருகின்றனர். முறையாக பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்க்கு நாளுக்குநாள் நாம் தள்ளப்பட்டாலும் அதனை புறக்கணிக்கவே குறியாக இருக்கின்றோம்.

1. பாதசாரிகள் கவனத்திற்க்கு;
 • பாதசாரிகள் சரியான இடங்களில் சாலைகளை கடப்பதில் இன்றுவரை தடுமாற்றத்திலே இருக்கின்றனர். எந்த குறுக்கு வழி இலகுவானது என தேடாதீர்கள். சரியான ஜிப்ரா க்ராசிங் அல்லது சுரங்க வழி அல்லது மேம்பாலத்தை பயன்படுத்துங்கள்.
 • எக்காரணம் கொண்டும் வளைவுகளில் சாலைகளை கடக்காதீர்கள்.
 • இரவுநேரங்களில் பாதசாரிகள் முடிந்த வரை ஒளிரும்  உடைகளை பயன்படுத்துங்கள்.
 • எக்காரணம் கொண்டும் சாலைகளில் கூட்டமாக பயணிக்காதீர்.
 • சாலைகளில் விளையாடுவதை முற்றிலும் தவருங்கள்.விளையாட்டு என்றுமே வினைதான்.
 • பாதசாரிகள் எப்பொழுதும் சரியான நடைபாதையை பயன்படுத்தவும்.
2. பொது போக்குவரத்து பயனாளர்களுக்கு
 • பொது போக்குவரத்தில் மிகப் பெரிய இடைஞ்சலே காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் இட நெருக்கடிதான். இவற்றை சமாளிக்க சில கூடுதல் வாகனங்களை இயக்கினாலும் நன்றாகத்தான இருக்கும்.
 • முடிந்தவரை படிகளில் பயணம் செய்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
 • தனி நபர் வாகனங்களை சரியான திட்டமிட்டு நாம் குறைக்க தவறி வருகிறோம்.  இதனை ஆட்சியாளர்கள் மட்டும் அல்ல நாமும் கவனத்தில் கொண்டு குறைக்க முயற்ச்சிக்க வேண்டும்.
 • பொது போக்குவரத்தின் சிறப்பே குறைவான விலையில் நிறைவான பயணம்.
 • எக்காரணம் கொண்டும் கை மற்றும் தலையினை சன்னலுக்கு வெளியே நீட்டாதீர்.
 • 20 நிமிட பயணத்திற்க்கு இரண்டு மணி முன்பே கிளம்ப வேண்டும். அதுதான் பொது  போக்குவரத்தின் பின்னடைவே அதற்க்கு காரணம் தனி நபர்கள் வாகனங்களே…
3.தனி நபர்களுக்கு
 • முடிந்த வரை பொது போக்குவரத்தினை பயன்படுத்துங்கள்.
 • மிக அவசரத் தேவைகளுக்கு மட்டுமே   பயன்படுத்துங்கள்.
 • எந்த இடத்தில் சந்து கிடைக்கிறது. அங்கு வாகனங்களை சொருக முயற்ச்சிக்காதீர்கள்
 • உங்களை போலதான் மற்றவர்களும் முடிந்த வரை  பொது போக்குவரத்திற்க்கு இடையுரினை தராதீர்கள்.
கவனியுங்கள்:

எக்காரணம் கொண்டும் அவசர வாகனங்களான ஆம்பூலன்ஸ்,தீயனைப்பு வாகனங்களுக்கு இடையூரு தராதீர்கள். அவைகள் கடவுளுக்கு மேலான  சேவை செய்கின்றன.

108