காலா ஜீப்பை கைப்பற்றிய ஆனந்த் மஹிந்திரா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்ற காலா திரைப்படத்தில் முதல் போஸ்டர் வெளியீட்டின் போது இடம்பெற்றிருந்த மஹிந்திரா தார் மாடலை ஆனந்த் மஹிந்திரா தனது மஹித்திரா அருங்காட்சியகத்துக்கு வாங்கியுள்ளார்.

காலா ஜீப்

ரஜினிகாந்த், ஹூமா குரேஸி, நானா படேகர், சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘காலா’. கபாலி படத்தை இயக்கிய பா.ரஞ்சித் இப்படத்தையும் இயக்கியுள்ளார். இந்நிலையில், காலா படத்தின் போஸ்ட்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தார் மாடலை நிறுவனம் தனது அருங்காட்சியத்திற்காக வாங்கியுள்ளது.

தார் மாடலை சென்னையில் உள்ள மஹிந்திரா ஆராய்ச்சி மையத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது . அந்த தார் எஸ்யூவி மாடலுட் அந்நிறுவனத்தின் பணியாளர்கள் சிலர் போட்டோ எடுத்துக்கொண்டிருப்பதை மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்