கேடிஎம் ட்யூக் 250 பைக் பற்றி தெரிய வேண்டிய 5 விஷயங்கள்

0

இந்தியாவின் முதன்மையான ஸ்போர்ட்டிவ் பைக் நிறுவனமாக விளங்கும் கேடிஎம் நிறுவனத்தின் கேடிஎம் ட்யூக் 250 பைக் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான 5 விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ktm 250 duke 1

Google News

கேடிஎம் ட்யூக் 250 பைக்

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற கேடிஎம் 200 மற்றும் 390 ட்யூக் பைக்குகளுக்கு இடையில் மிகவும் சவலான விலையில் மோஜோ , பெனெல்லி டிஎன்டி 25 மற்றும் யமஹா FZ25 போன்ற பைக் மாடல்களுக்கு எதிராக களமிறக்கப்பட்டுள்ளது.

250 ட்யூக் பற்றி 5 முக்கிய தகவல்கள்

1. டிசைன்

கேடிஎம் நிறுவனத்தின் சூப்பர் ட்யூக் பைக்கின் வடிவ அம்சங்களை அடிப்படையாக கொண்ட மிகவும் ஸ்டைலிசான தோற்ற அமைப்புடன் எல்இடி முகப்பு விளக்குடன் அமைந்துள்ளது.

2. இன்ஜின்

250 ட்யூக் பைக்கில் 30bhp பவரை வெளிப்படுத்தும் 250சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 24 NM வெளிப்படுத்தும். இதில் சிலிப்பர் கிளட்ச் ஆப்ஷனுடன் கூடிய 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

ktm 250 duke

3.  வசதிகள்

250 ட்யூக் பைக்கில்  WP சஸ்பென்ஷன் அமைபினை பெற்று முன்புறத்தில் 43mm கார்ட்ரிட்ஜ் இன்வெர்டேட் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் மோனோஷோக் அப்சார்பர் இடம்பெற்றுள்ளது. முன்பக்க டயரில் 300மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க டயரில் 230மிமீ டிஸ்க் பிரேக்குடன் ஏபிஎஸ் பிரேக் சேர்க்கப்படவில்லை

4. போட்டியாளர்கள்

மோஜோ , பெனெல்லி டிஎன்டி 25,  ஹிமாலயன் மற்றும் யமஹா FZ25 போன்ற பைக் மாடல்களுக்கு எதிராக களமிறக்கப்பட்டுள்ளது.

5. விலை

கேடிஎம் ட்யூக் 200 மற்றும் ட்யூக் 390 பைக் மாடல்களுக்கு இடையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள கேடிஎம் ட்யூக் 250 விலை ரூ.1.73 லட்சம் (டெல்லி எக்ஸ்ஷோரூம்.) ஆகும்.