ரத்தன் டாடா அவர்களின் கனவுகார் மாடலான நானோ காரின் ஈர்ப்பினாலே வடிவமைக்கப்பட்ட ரெனால்ட் க்விட் கார் ரெனால்ட் நிறுவனத்துக்கு லாபத்தை வழங்க தொடங்கியுள்ளதாக மிட்சுபிஷி, நிஸான்- ரெனோ நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி காரல் கோஸன் தெரிவித்துள்ளார்.
க்விட் கார்
சமீபத்தில் ஆட்டோகார் இந்தியா இணையதளத்துக்கு அளித்துள்ள பிரத்யேகமான பேட்டியில் க்விட் கார் பற்றி கேட்க்கப்பட்ட சில கேள்விகளுக்கு க்விட் காரின் வடிவமைக்க முக்கிய காரணங்களில் ஒன்று என்றால் அது ரத்தன் டாடா அவர்களின் நானோ கார்தான் என கூறியுள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டில் விற்பனைக்கு வந்த ரெனால்ட் க்விட் தொடக்கநிலை கார் அமோக வரவேற்பினை பெற்று 1.30 லட்சம் கார்களுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. க்விட் கார் 0.8 லி மற்றும் 1.0 லி என இரு என்ஜின் ஆப்ஷன்களுடன் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்சிலும் கிடைக்கின்றது. நேற்று க்விட் காரின் அடிப்படையிலான கிளைம்பர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் லாபத்தை ஈட்ட தொடங்கிவிட்டீர்களா ? என்ற கேள்விக்கு பதில் அளித்த கோஷன் ஆரம்பத்தில் புதிய ஆலை என்பதனால் மிக கடுமையாக போராடி வந்த நிலையில் க்விட் காரின் வெற்றிக்கு பிறகு தற்பொழுது 1 லட்சம் க்விட் விற்பனையை கடந்தததை தொடர்ந்து இந்தியா ரெனால்ட் நிறுவனம் லாபத்தை பெற தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நானோ காரின் உந்துதல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு.. பெரும்பாலோனார் நானோ காரை தவறான ஐடியா என கூறினாலும் நான் மட்டுமே ரத்தன் டாடா அவர்களின் கனவு திட்டமாக உருவாக்கப்பட்ட நானோ மிக சிறப்பான மாடல் என்றே கூறுவேன். நானோ காரின் ஈர்ப்பினாலே க்விட் மாடல் உருவானது.
நானோ பெரிதாக வெற்றி பெறவில்லை ? க்விட் வெற்றி என்ன காரணம் உங்கள் கருத்து என்ன ?….